districts

img

தருமபுரி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி

தருமபுரி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணி அறிமுக கூட்டம் நல்லம்பள்ளியில் நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் முன்னி லையில், வேட்பாளர் ஆ.மணி வாக்குசேகரித்து பேசினார். இதேபோல் ஏரியூரியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.