ஈரோடு, நவ.14- பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவை அமைச்சர் சு.முத்துசாமி வியாழனன்று துவக்கிவைத்தார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை, வாய்க்கால்மேடு நந்தா பொறியியல் கல்லூரியில், பள்ளிக்கல்வித்துறை யின் சார்பில், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி நடைபெற் றது. இப்போட்டிகளை துவக்கிவைத்து அமைச்சர் முத்துசாமி பேசுகையில், கடந்த வருடம் அதிகளவிலான போட் டிகளில் வெற்றி பெற்ற மாவட்டங்களில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில், 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி அளவிலான போட்டிகள் முடிவுற்று வட் டார அளவிலான போட்டிகள் அக்.21 முதல் நவ.7 ஆம் தேதி வரை நடைபெற் றது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி கள் வியாழனன்று துவங்கி, நவ.20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் முதலி டம் பெற்ற 1912 அரசுப் பள்ளி மாண வர்கள், 820 அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 2732 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர், என் றார். இவ்விழாவில், ஈரோடு நாடளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மாநக ராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், முதன்மைக் கல்வி அலுவலர் கோ.சுப் பாராவ், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) நா.புஷ்பராணி, நந்தா கல்வி நிறுவன தலைவர் வெ.சண் முகம், செயலர் ச.நந்தகுமார் பிரதீப் உட்பட கல்வி அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.