districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பல் மருத்துவமனை திறப்பு விழா

நாமக்கல், மே 30- கேஎஸ்ஆர் பல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் உள்ள நவீன சிறப்பு பல் மருத்துவ வசதி பெற்ற “RANG பல் மருத்துவ மனையின்” திறப்பு விழா  நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அமைந்துள்ள  கேஎஸ்ஆர் பல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன  வளாகத்தில், நவீன சிறப்பு பல் மருத்துவ வசதி பெற்ற  “RANG பல் மருத்துவ மனையின்” திறப்பு விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சியை, கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்க ளின் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். இந்த பல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உயரிய சிகிச்சை வழங்குவதற்கான செயல்பட்டு வருகிறது. இம்மருத் துவமனையில், பல் சிகிச்சை தொடர்பான உயர்தர சிகிச்சை  முறைகளை பெற்று பயன்பெறலாம் என மருத்துவர்கள் தெரி வித்தனர்.  இந்நிகழ்வில், கேஎஸ்ஆர் கல்விக்குழும நிர்வாக இயக்கு னர் வி. மோகன் மற்றும் கேஎஸ்ஆர் கல்விக்குழுமத்தின் கொள்முதல் மற்றும் செயல்பாட்டு இயக்குனர் குழந்தை வேலு ஆகியோர் குத்து விளக்கேற்றினர். கேஎஸ்ஆர் பல்  மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர்  மருத்துவர். சரத் அசோகன், துணை முதல்வர்கள், இயக்குநர் கள், கேஎஸ்ஆர் பல் மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனத் தின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கேரட் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

உதகை, மே 30- கோத்தகிரியில் பயிரிடப்பட்டுள்ள கேரட்  விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும்  அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயி லைக்கு அடுத்த படியாக உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், பீட்ரூட், கேரட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் சாகுபடி செய் யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது மலைக்காய்க றியான கேரட் விலையானது கோத்தகிரி காய்கறி மண்டியில் ரூ.30 முதல் ரூ.45  வரை விலை விற்பனையகிறது. மேட்டுப்பா ளையம் காய்கறி மண்டிகளில் கேரட் ரூ.45 முதல் ரூ.50 வரை தரத்திற்கு ஏற்றவாறு கொள்முதல் செய்யபட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

மராமத்துப் பணிகளுக்கு இடையூறு - புகார்

ஈரோடு, மே 30- ஈரோடு கீழ்பவானி வாய்க்காலில் மரா மத்துப் பணிகள் மேற்கொள்ள இடையூறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் தெரிவிக்கபட்டது.  ஈரோடு சென்னிமலை பாசனப் பிரிவு, நீர்வளத் துறை உதவிப் பொறியாளர், சென்னி மலை போலீசில் அளித்துள்ள புகாரில் கூறி யிருப்பதாவது: அரசு உத்தரவின்படி, கீழ்ப வானி வாய்க்காலில் விரிவாக்குதல், புதுப் பித்தல் உள்ளிட்ட மராமத்துப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி,  ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள கீழ்பவானி வாய்க்கால் மைல் 84/0-1இல் (குன்னாங்காட்டு வலசு பகுதி யில்) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.  இந்நிலையில், அங்கு வந்த சிலர் பணிகளை  மேற்கொள்ள விடாமல் இடையூறு செய்து  தடுத்து நிறுத்தினர். எனவே, அரசு உத்தரவின் படி பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த புகா ரின்பேரில்  சென்னிமலை போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

காந்திபுரத்தில் போக்குவரத்து மாற்றம்

கோவை, மே 30- கோவை காந்திபுரம் மாநகர பேருந்து நிலையம் அருகே மீண்டும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டம், காந்திபுரம் பேருந்து  நிலையம் பகுதியில் அருகருகே மூன்று பேருந்து நிலையங்கள் ஒரே இடத்தில் இருப்பதால் எப்போதும் பயணிகள் கூட்டம்  அலைமோதும். இதைக் கருத்தில் கொண்டு  நெரிசலை சமாளிக்க, அவ்வபோது போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில், மகளிர் பாலிடெக்னிக் சாலையில்  இருந்து வரும் வாகனங்கள், நேரடியாக கிராஸ்கட் சாலைக்கோ, 100 அடி சாலையை  நோக்கியோ செல்லாத வகையில் தடை ஏற்படுத்தப்பட்டு, காட்டூர் காவல் நிலையம் வரை வந்து பாலத்திற்கு அடியில் யூடர்ன் போட்டு திரும்பிச் செல்லும் வகையில் ஏற் பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பல் வேறு குழப்பங்கள் நிகழ்ந்தன. அப்பாதை வழியாக பயணிகளும் சென்று வந்ததால், போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி ஏற்பட்டது.  இதற்கு தீர்வு காணும் வகையில் காந்தி புரத்தில் மீண்டும் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஏற்க னவே இருந்த பாதை வாகனங்கள் நுழைய முடியாத தடுப்புகளால் அடைக்கப்பட்டு, பயணிகள் மட்டும் நடந்து செல்ல சிறு வழி  போடப்பட்டு உள்ளது. ரவுண்டானா வாகனங் கள் அந்த இடத்தையும் தாண்டி மேட்டுப்பா ளையம் உள்ளிட்ட வெளியூர் பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும் பேருந்து நிலையத் தின் முன்பாக திரும்பி செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.  இதேபோல கணபதி, 100 அடி சாலை யில் இருந்து வரும் வாகனங்கள் இது வரை நகர பேருந்து நிலையம் பின்புறம்  இருக்கும் ரவுண்டானா சென்று திரும்பி  வந்தன. அதிலும் சிறு மாற்றம் செய்யப்பட்டு  உள்ளது. பிரதான சாலையின் அருகிலேயே யூடர்ன் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் வழி யாக வாகனங்கள் திரும்பிச் செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்தினால் போக்கு வரத்து நெரிசலை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஷன் அரிசி கடத்தல்  146 பேர் மீது வழக்கு பதிவு

நாமகக்ல், மே 30-   ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 146 பேர் மீது வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 5 மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 146 பேர் மீது வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வா ளர் ரமேஷ் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில், ரேஷன்  அரிசி கடத்தல் மற்றும் பதுக்கி வைத்திருத்தல் தொடர்பாக,  146 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் சம்மந்தப் பட்ட 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும்,  அவர்களிடம் இருந்து 36 டன் ரேஷன் அரிசி மற்றும் 17 சமையல் ஏரிவாயுகளை கைப்பற்றி, கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 29 வாகனங்களின் உரிமையாளர்கள் மீது,  மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப் பட்டு, ரூ. 12 லட்சத்து 13 ஆயிரத்து 127 ரூபாய் அபராதம் வசூல்  செய்யப்பட்டுள்ளது. இந்த ரேஷன் அரிசியை கோழிப்பண்ணைகளுக்கு தீவன மாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், தீவிர  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

திருப்பூரில் டிஎன்பிசி குரூப் 1, 2 தேர்வு இலவசப் பயிற்சி வகுப்புகள்

திருப்பூர், மே 30- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறி விக்கப்பட்ட குரூப் 1 தேர்வு மூலமாக துணை ஆட்சியர், துணைக் கண்காணிப்பாளர் (காவல்துறை), உதவி ஆணை யர் (வணிக வரித்துறை), துணை பதிவாளர் (கூட்டுறவுத் துறை), உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சித் துறை), மாவட்ட  வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் மாவட்ட அலுவலர் (தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை) போன்ற 90  பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்க ளுக்கான தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும் என தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர்  தேர்வாணைய ஆண்டு திட்ட அறிக்கையில் வரும் செப்டம்பர்  மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2எ  தேர்வுகள் மூலம் 2030 பணியி டங்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிசி குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகள் மூலம் நிரப்பப்ப டவுள்ள பணியிடங்களுக்கு இலவசப்  பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் மே 31 ஆம் தேதி காலை 10 மணியள வில் தொடங்க உள்ளது. இத்தேர்வுக்கான  இலவசப் பயிற்சி  வகுப்பில் கலந்து கொள்ள தங்கள் பெயரை வேலைவாய்ப்பு  அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944   என்ற  எண்ணிலோ  தொடர்பு  கொண்டு   பதிவு செய்து கொள்ள லாம்.  மேலும்,  இப்பயிற்சியில் மாதம் இருமுறை மாதிரித்   தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.  இப்பயிற்சியில் சேர்ந்து தேர்வர்கள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் ரூ.2 ஆயிரம் கையூட்டு: வருவாய் ஆய்வாளர் கைது

திருப்பூர், மே 30 – திருப்பூரில் பயனாளியிடம் ரூ.2ஆயிரம் கையூட்டுப் பெற்ற வருவாய் ஆய்வாளர் மைதிலி கைது செய்யப்பட் டார்.  திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 3ஆவது மண்டலம் நல்லூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருப வர் மைதிலி. முத்தனம்பாளையம் அடுத்த ரங்ககவுண்டம்பா ளையம் பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஜீவா. இவரது  அப்பா ராஜேந்திரன் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்ததால், வாரிசு சான்றிதழ் கோரி ஜீவா விண்ணப்பித்தார். ஜீவா முதல் முறை விண்ணப்பித்தபோது, வாரிசு சான்றிதழ் கோரிய விண் ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது முறையாக விண்ணப்பித்தபோது வருவாய் ஆய்வாளர் ரூ.2  ஆயிரம் கையூட்டு கேட்டிருக்கிறார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் ஜீவா புகார் தெரிவித்தார். அவர்கள்  ரசாயணம் தடவிய பணத்தை கொடுத்து வருவாய் ஆய்வாள ரிடம் கொடுக்கும்படி கூறினர். அதன்படி வருவாய் ஆய்வா ளர் மைதிலி கையூட்டுப் பெற்றபோது அவரை லஞ்ச ஒழிப்பு  காவலர்கள் கைது செய்தனர்.

மீண்டும் கண்ணாடி மாளிகை திறப்பு

மீண்டும் கண்ணாடி மாளிகை திறப்பு உதகை, மே 30- உதகையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைந்துள்ள தால் கண்ணாடி மாளிகையை காண சுற்றுலாப் பயணிக ளுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா விற்கு தின தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரு கின்றனர். இந்நிலையில், கோடை சீசன் என்பதால் தற்போது பூங்காவில் மலர் கண்காட்சிக்காக மாடங்களில் பல்வேறு  வகையான மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட் டுள்ளது. மேலும், இத்தாலியன் பூங்கா, புதிய பூங்கா உள் ளிட்டவைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மலர் அலங்காரத் தையும் கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக, பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகைக்குள் சென்று புகைப்படங்களை எடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், கண்ணாடி மாளி கையில் ஏராளமான தொட்டிகளில் மலர் செடிகள் வைக்கப் பட்டுள்ளது. இங்கு பல வடிவங்களில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரத்தை சுற்றுலாப் பயணிகள் காண செல்லும் பொழுது, சிலர் தொட்டிகளை தட்டி விட வாய்ப்புள்ளதாக கருதி மலர் கண்காட்சி நடந்த தினங்களில் கண்ணாடி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால், பூங்காவிற்கு வந்த  சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மலர் கண்காட்சி முடிந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை சற்று  குறைந்து காணப்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் வகையில் தற்போது பூங்காவில் உள்ள கண் ணாடி மாளிகை திறக்கப்பட்டுள்ளது. மேலும், பல வகை யான லில்லியம் மலர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான  மலர்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்ற னர்.

மாணவிகள் மயக்கம்:  தனியார் கல்லூரிக்கு நோட்டீஸ்

மாணவிகள் மயக்கம்:  தனியார் கல்லூரிக்கு நோட்டீஸ் சேலம், மே 30- சேலத்திலுள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகள் தரம் குறைவான உணவை உட்கொண்டு மயக்கமடைந்த நிலையில், விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சேலம், நான்கு சாலையில் உள்ள தனியார் மருத்துவம னைக்கு சொந்தமான செவிலியர் கல்லூரி அயோத்தியாப் பட்டணம் அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும்  மேற்பட்ட மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வரு கின்றனர். விடுதியில் கடந்த ஞாயிறன்று இரவு உணவு உட் கொண்ட சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி,  மயக்கம் ஏற்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் சேலம், நான்கு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, மேல்  சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆத்தூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் யோகானந், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன், அதி காரிகள், செவிலியர் கல்லூரிக்குச்சென்று உணவு கூடத்தை  ஆய்வு செய்தனர். தொடர்ந்து, விடுதி உணவகத்துக்கு தற் காலிகமாக ‘சீல்’ வைத்தனர். இதனிடையே, சம்பவத்தன்று மாணவிகளுக்கு ஏற்பட்ட உடல்நலம் பாதிப்பு குறித்து ஆத்தூர் சுகாதாரத்துறைக்கு ஏன்  தகவல் தெரிவிக்கவில்லை என விளக்கம் கேட்டு சுகாதாரத் துறை சார்பில் தனியார் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. மாணவிகளை முதலில் தனியார் மருத்துவமனை யில் அனுமதித்த நிலையில், அதுகுறித்த தகவலும் அளிக்கா தது ஏன்? என்பது குறித்து குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சேலம் மாநகர சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப் பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் உரிய விளக்கம் அளிக்கா விட்டால் பொது சுகாதாரத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மலைவாழ் குடியிருப்பில் ஆட்சியர் ஆய்வு
மலைவாழ் குடியிருப்பில் ஆட்சியர் ஆய்வு தருமபுரி, மே 30- காரிமங்கலம் அருகே உள்ள மலைப்பகுதியில் வசிக்கும்  பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், பஞ்சப்பள்ளி  ஊராட்சியில் ரூ.89.58 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை, சுர குரிக்கை கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி  அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், செல் போன் டவர் அமைப்பது குறித்தும், கேசர்குளி அல்லா ஆற் றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் செயல்படுத் தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளையும் தர மாகவும், துரிதமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித் திட வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இத னைத்தொடர்ந்து காரிமங்கலம் ஒன்றியம், ஜம்பூத் மலைக் கிராம பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்ட றிந்து, உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமென துறை  சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, பாலக்கோடு வட்டாட்சியர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கடமான் முட்டியதில்  வனவிலங்கு பாதுகாவலர் உயிரிழப்பு

சேலம், மே 30- குரும்பட்டி உயிரியல் பூங்காவிலுள்ள கடமானுக்கு உணவு வைக்க சென்றபோது, கடமான் முட்டியதில் வன விலங்கு பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், செட்டிசாவடி அருகே குரும்பட்டி உயிரி யல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு முதலை, கடமான், குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பரா மரிக்கப்பட்டு வருகின்றன. இப்பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தினந் தோறும் வன விலங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகி றது. அதனடிப்படையில் வியாழனன்று வனவிலங்கு பாதுகா வலர் தமிழ்ச்செல்வன், கடமானுக்கு உணவு வைக்க சென் றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கடமான் தமிழ் செல்வனை முட்டியதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றொரு வன விலங்கு பாதுகாவலர் முருகேசன் என்பவர், தமிழ்ச்செல் வனை காப்பாற்ற முயன்றபோது அவரை மான் முட்டியது. இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிக் சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துமனையில் தமிழ்ச் செல்வனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். முருகேசன் நெஞ்சு பகுதியில் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ளார். உணவு வைக்க சென்றபோது கடமான்  முட்டியதில் வனவிலங்கு பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்த சம் பவம் வன ஊழியர்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது.

பதக்கங்களை குவித்த சேலம் காரத்தே வீரர்கள்

சேலம், மே 30- சர்வதேச அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் 29 தங்கம், 9 வெள்ளி, 13 வெங்கலம் என பதக்கங்களை வென்று, சாப்பியன் பட்டத்தை சேலம் வீரர்கள் கைப் பற்றினர். மலேசியாவில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி கடந்த மே 26 ஆம் தேதி  நடைபெற்றது. இதில் இந்தியா, பங்களா தேஷ், ஸ்ரீலங்கா, இங்கிலாந்து, தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 10 வயது முதல் 18 வயதுக் குட்பட்ட கராத்தே போட்டியில் தனிநபர் மற் றும் குழு போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் சேலத்தி லிருந்து 24 மாணவிகள் மற்றும் 3 மாணவர் கள் என 27 பேர் பங்கேற்றனர். இரு பிரிவின் கீழ் நடைபெற்ற கராத்தே போட்டியில் சேலம் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்ற னர். 29 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்க லம் ஆகியவற்றை வென்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் தட்டித்தூக் கினர். சாதனை படைத்த மாணவ, மாணவி கள் தாயகம் திரும்பிய நிலையில், அவர்க ளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொ டர்ந்து மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற னர்.


 

 

;