கோவை மாவட்டத்தில் பொள் ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகள் யானைகள், புலி கள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள் உட்பட பல்வேறு வன விலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகின்றன.
ஆனைமலை புலிகள் காப்பகத் திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஒரு காட்டு யானைக் கூட்டம் உலா வரு கிறது. குட்டியுடன் உலா வரும் இந்த யானைக் கூட்டம், அடர் வனப்பகுதியில் ஓர் இடத்தில் ஓய்வெடுத்துள்ளன. அப்போது குட்டி யானை உறங்க, பாது காப்பிற்காக அதனைச் சுற்றி 3 யானை கள் படுத்து உறங்கியுள்ளன.
பசுமையின் அரவணைப்பில் குட்டி யானை உட்பட 4 காட்டு யானை கள் தரையில் படுத்து கால் நீட்டி உறங்க, ஒரு பெண் யானை, உறங்கும் யானை களுக்கு காவலாக நின்றிருந்தது. இந்த அழகிய காட்சிகளை அப்பகுதியில் இருந்த புகைப்படக்கலைஞர் வீடியோ எடுத்துள்ளார். இந்தக் காட்சிகளை தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.