districts

img

சட்டவிரோத 24 மணி நேரமும் மதுபான விற்பனை

திருப்பூர், ஆக.4- பூழுவபட்டி திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடையில் 24 மணி நேர மும் சட்டவிரோதமாக மது விற் பனை நடைபெறுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, பூலுவபட்டி திரு முருகன்பூண்டி ரிங் ரோடு ஆனது, பள்ளி கல்லூரி மாணவர்கள், தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர் கள் என்று தினம்தோறும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் சென்று வரும் பிரதான சாலையாகும். 150க்கும் மேற்பட்ட குடியிருப்புக ளும், தனியார் பள்ளி, மருத்துவ மனை, திருமண மண்டபம் என்று மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் டாஸ்மாக் கடை உள் ளது. இன்னும் சில மாதங்களில் இஎஸ்ஐ மருத்துவமனையும் திறக்கப்பட உள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இங்கு கடை திறப்பதாக அறிவிக்கப்பட்ட அன்றே இப்பகுதி மக்கள் உட்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இந்த கடை திறக்கப்பட்டது. தற்பொழுது இந்த கடையில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. எவ்வித அசம்பாவிதமும் நடைபெறும் முன்பே இந்த கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.