அவிநாசி, அக். 6 – அவிநாசியில் மதவெறி சக்திகளின் முயற் சிகளுக்கு எதிராக, சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்தை வெற்றி பெறச் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட் டது. அவிநாசி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.வெங்கடாசலம், ஒன்றி யச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சண்முகம், ஒன்றிய நிர்வாகி கோபால், விடுத லைச் சிறுத்தைகள் வெங்கடேசன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாய்கண்ணன், மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாபு, சரவணன், திராவிட கழகம் குமாரராஜா மற் றும் மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகி கள் கலந்து கொண்டனர். இதில் அவிநாசியில் அக்டோபர் 11 தேதியில் மாலை 4 மணிக்கு, புதிய பேருந்து நிலையம் முதல், பழைய பேருந்து நிலையம் வரை மனித சங்கிலி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப் பது என முடிவு செய்யப்பட்டது.