districts

img

இந்தி திணிப்பு: இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

எனக்கு முப்பது மொழி தெரியும், மூனு மொழிய படிச்சா என்ன?  தமிழக அரசிற்கு எதிராக தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் வாக்குவாதம்

ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை கண்டித்து நாடு முழுவ தும் இந்திய மாணவர் சங்கம் கல்வி  நிலையங்களின் முன்பு போராட் டத்தை நடத்தி வருகிறது. இந்நிலை யில், அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் சங்க ஆர்ப்பாட்டத்தின் போது பள்ளி நிர்வா கத்தினர் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், தமிழக சட்டமன்றத்தில் ஒன் றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதி ராக தமிழக முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்து சட்டமன்ற உறுப்பி னர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றிய அதே நாளில் அவிநாசி அரசு  பள்ளி தலைமை ஆசிரியர் இந்தி மொழிக்கு ஆதரவாக, சங்கிகளின் முகபாவத்தோடு மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.  ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி  அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இந்திய மாணவர் சங்க அவிநாசி ஒன் றிய செயலாளர் மணிகண்டன் தலை மையில், மாவட்ட நிர்வாகி மோகனப் பிரியா முன்னிலையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையறிந்த அப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆனந் தன், பள்ளி உதவியாளர் மாதையன் ஆகியோர் மாணவர்களை கலைந்து  செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தார். மேலும்,  இந்தி எதிர்ப்பு பதாகை களை பிடுங்கி, வீசி தகாத வார்த்தை களை பயன்படுத்தி ரகளையில் ஈடு பட்டனர். இதையடுத்து மாணவர் சங்க நிர்வாகிகளிடம் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளர் மாதையன், “மும்மொழி கொள்கை  கற்றுக்கொள்ள வேண்டியதுதானே” எனக்கு முப்பது மொழி தெரியும்,  மூன்று மொழிகளை கற்றுக்கொண் டால் என்ன கேடு என ரகளையில் ஈடு பட்டார்.

இது மாணவர்களுக்கு மட்டு மல்லாமல் அங்கிருந்த கல்வியாளர் களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தமிழக அரசின் நிலைப் பாட்டிற்கு எதிராக அரசு பள்ளி ஆசிரி யர் ஒருவரே இந்தியை படிக்க வேண் டியதுதானே என பொது வெளியில் பகிங்கிரமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தலைமையாசிரியர் காவல் நிலையத்திற்கு புகார் தெரி வித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவ சங்க நிர் வாகிகளிடம் விசாரித்தனர். மேலும், பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என காவலர்கள் தெரிவித்த னர். மாணவர்களின் ஆர்ப்பாட் டத்தை பள்ளி முன்பு நடத்தாமல் முதி யோர் இல்லம் முன்பா நடத்த வேண் டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி யினரும் சம்பவ இடத்திற்கு வந்த தால், ஆர்ப்பாட்டம் குறித்து காவல் துறைக்கு முறையான அனுமதி கடி தம் அளித்த பின்பு போராட்டம் நடத்து மாறு மாணவர் சங்கத்திடம் காவல் துறையினர் வலியுறுத்தினர்.

சேலம், அக்.18- ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தி னர் தமிழகம் முழுவதும் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி உள்ளிட்ட  கல்வி நிலையங்களில் இந்தி மொழி  மட்டும் பயன்படுத்த முடிவெடுத்துள் ளது. மேலும், இந்தியா முழுவதும் இந்தி  திணிப்பை நிறைவேற்றி வருகிறது. இத னால் மாநில மொழிகள் பின்னுக்கு தள் ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், ஒன்றிய அரசின் இந்தி மொழி திணிப்பை கண்டித்து இந்திய மாண வர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதன்ஒருபகுதியாக சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாண வர் சங்க மாவட்ட தலைவர் அருண் குமார் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் பவித்ரன், மாவட்ட நிர்வாகிகள் முத்துக்குமரன், டார்வின் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கல்லூரியின் மாண வர் சங்க கிளைச் செயலாளர் மகேந்தி ரன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட தலை வர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் கோகுல், நிர்வாகிகள் முகேஷ், செல்வ ராணி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க  மாவட்ட தலைவர் அனிஷா தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலா ளர் யோகராஜ், மாவட்ட துணைச்செய லாளர் சச்சின், மாவட்ட துணைத்தலை வர்கள் வினித், பவித்ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

;