districts

img

தமிழக முதல்வரின் முன்னெடுப்பு நீதித்துறை கட்டுமானங்கள் வேகமெடுக்கிறது

கோவை, செப்.8- தமிழக முதல்வரின் முன்னெடுப்பில் நீதித் துறை கட்டுமானங்கள் வேகமெடுப்பதாக கோவையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்தார். கோவை பந்தயசாலை பகுதியிலுள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலக மண்டல மைய வளாகத்தில் ரூ.2.39 கோடி மதிப்பீட் டில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் ஓட்டுநர் ஓய்வு அறை கட்டிடம் ஆகியவற்றை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி வியாழனன்று திறந்து வைத்தார். இக்கட்டிடம் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் வடிவமைப்பில் ரூ 7 ஆயி ரத்து 922 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட் டுள்ளது. தரைத்தளம் மற்றும் மூன்று தளங் கள் ஒவ்வொரு தளமும் 1984 சதுரஅடி பரப் பளவில் அமைக்கப்பட்டுள்ளன.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.  அதற்கு நிக ராக நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வில்லை. ஜனநாயகத்தை காக்கும் கடைசி பொறுப்பு நீதிமன்றத்துக்கு தான் உள்ளது.  நீதித்துறைக்கு போதிய நிதி ஆதாரங்கள்  ஒதுக்கப்படுவதில்லை. தமிழக  பட்ஜெட்டி லும் நீதித்துறைக்கான ஒதுக்கீடு போதுமான தாக இல்லை. அதிகமான வழக்குகளை கையாளும் மாவட்ட நீதிமன்றங்கள் உள் ளிட்ட கீழமை நீதிமன்றங்களை வலுப்படுத்து வது அவசியமாக உள்ளது, என்றார்.

தமிழக முதல்வரின் முன்னெடுப்பு

இதையடுத்து நீதிபதி முனீஸ்வர்நாத் பண் டாரி பேசுகையில், தமிழக முதல்வரின் முன் னெடுப்பில் நீதித்துறை கட்டுமானங்கள் வேக மெடுத்து வருகிறது. சென்னை உயர்நீதி மன்றத்திற்கு 7 ஏக்கரில் 500 கோடி மதிப்பி லான நிலம் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவ தற்கு வழங்கப்பட்டுள்ளது. நகருக்கு நடுவே  இவ்வளவு மதிப்புள்ள நிலத்தை வழங்க பல அரசுகள் தயக்கம் காட்டி வந்த சூழலில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விவகா ரத்தை தமிழக முதல்வர் தீர்த்து வைத்துள் ளார். நிலுவையில் உள்ள வழக்குகள் அதிக ரிப்பு பற்றி நிதியமைச்சர் கூறினார். சென்னை  உயர்நீதிமன்றம் தான் அதிக வழக்குகளை தீர்த்து வைத்துள்ளது.  சென்னை உயர்நீதிமன்றம் வழக்குகளை முடித்து வைக்கும் சதவிகிதம் 109 சதவிகித மாக உள்ளது. மேலும், தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விட முடித்து வைக்கப்படும் வழக்குகள் அதிகமாக உள்ளது. தமிழக அரசி டம் 116 நீதிமன்ற அறைகள்  வேண்டும் என கேட்டிருந்தோம். ஆனால் 150 நீதிமன்ற அறை கள் கட்டுவதற்கு விரைவாக நிதி ஒதுக்கப் பட்டது. நீதித்துறைக்கு தேவையான நீதிபதி களில் மூன்றில் ஒரு பங்கு  நீதிபதிகள் பணி யிடங்களே இருக்கும் நிலையிலும்  வழக்கு களை விரைந்து முடித்து வருகிறோம். சென் னையில் நடைபெற்ற தலைமை நீதிபதி கள் மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்றம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டி யுள்ளார். தமிழக அரசின் உதவியில்லாமல் இது சாத்தியமாகியிருக்காது, என்றார். இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி பரிஷ் உபத்யாய், கோவை  மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகர், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாரா யணன், கோவை மாவட்ட முதன்மை மாஜிஸ் ரேட் எம்.சஞ்சீவி பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.