districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் அதிமுக பிரமுகர் மகன் கைது

சேலம், செப்.15- செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிய இளை ஞரை போக்குவரத்து காவலர் கண்டித்த நிலையில், போக்கு வரத்து காவலரை அதிமுக பிரமுகர் மகன் தாக்கினார். இத னையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சேலம் மாநகர பகுதியில் போக்குவரத்து காவலராக இருப்பவர் பாண்டியன். இவர் வியாழனன்று காலை பழைய  பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர், இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசிய படியே வந்துள் ளார். இதனைப்பார்த்த பாண்டியன் அவரை மறித்து, “பேருந்து நிலையம் அருகில் இப்படி செல்போனில் பேசிக்கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டி செல்லலாமா?” என்று கேட்டுள் ளார். இதனால் ஆத்திரமடைந்த கோகுல்ராஜ், போக்குவரத்து காவலர் பாண்டியன் மூக்கில் ஓங்கி குத்தினார். இதையடுத்து  கோகுல்ராஜை அம்மாபேட்டை காவல் துறையினர் நான்கு  பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர். போக்கு வரத்து காவலரை தாக்கிய நபர் அதிமு முன்னாள் எம்பி  பன்னீர்செல்வத்தின் அண்ணன் மகன் என்பதும், ஏற்கனவே  இவர் மீது குற்றவழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மின் கட்டண உயர்வு: விசைத்தறி ஜவுளி ஆர்டர்கள் பிற மாநிலங்களுக்கு செல்லும் அபாயம்

நெசவாளர்கள் கவலை

ஈரோடு, செப். 15- மின் கட்டண உயர்வால், விசைத்தறி சார்ந்த ஜவுளி ஆர்டர் கள், பிற மாநிலங்களுக்கு செல்லும்  அபாயம் ஏற்பட்டுள்ளதாக, நெச வாளர்கள் அச்சம் தெரிவித்துள் ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் நேரில் சந்தித்து முறையிட விசைத்தறித் துறை நெசவாளர்கள் முடிவு செய் துள்ளனர். தமிழகத்தில் மின்கட்டண உயர்வு குறித்த பேச்சு எழுந்த போது, விசைத்தறி நெசவாளர்கள் தங்களுக்கு கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், அனைத்துப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தையும் தமிழக அரசு  உயர்த்தியுள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு விசைத் தறியாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு அமைப்புச் செயலர் கந்த வேல் கூறுகையில், தமிழக அரசு  நடத்திய ஆலோசனைக் கூட்டங் களில், மின் கட்டண உயர்வால்  தொழில் பாதிப்பு குறித்து எங்கள்  கூட்டமைப்பு விளக்கம் அளித் துள்ளது. இது குறித்து சமீபத்தில் கொங்கு மாவட்டங்களுக்கு சென்ற  முதல்வரிடம் தெரிவித்தோம். ஆனால், தற்போது நிலைக் கட்டணம் மட்டும் குறைக்கப்பட்டு, மின் கட்டணம் யூனிட்டுக்கு ஒரு  ரூபாய் 47 பைசா உயர்த்தப்பட் டுள்ளது. ஏற்கனவே நூல் விலையில் ஏற் படும் ஏற்ற இறக்கத்தால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, மின் கட்டண உயர்வால் மேலும் பாதிக்கப்படுவோம். இதை சமாளிக்க நூற்பாலைகள் நூல் விலையை உயர்த்தும். இதன் விளைவாக, விசைத்தறி உட்பட ஒவ்வொரு தொழில் சார்ந்த நூல் களும் அவற்றின் விலையை உயர்த்த வேண்டியிருக்கும். இத னால் தமிழகத்தில் உற்பத்தி யாகும் ஜவுளிகளின் விலை உயரும். தற்போது நமக்கும், மற்ற  மாநிலங்களுக்கும் ஆர்டர்களின் விலையில் அதிக வித்தியாசம் இல்லை. மின் கட்டண உயர்வை சமாளிக்க ஆர்டருக்கான விலை யை உயர்த்தும் போது, ஆர்டர் கள் தானாக மற்ற மாநிலங் களுக்கு செல்லும் ஆபத்து உள்ளது. ஆர்டர்கள் அதிகம் உள்ள  மாநிலங்களை நோக்கி தொழில் களும் நகரும். எனவே இது தொடர் பாக முதல்வரை சந்திக்க அனுமதி  கேட்டுள்ளோம் என்றார். கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர் பால சுப்ரமணியம் கூறுகையில், இந்த  விலை உயர்வால், 16 விசைத்தறி  உரிமையாளர்கள் வழக்கமான  மின் கட்டணத்தில் இருந்து, தலா 11 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. எனவே,செவ்வாய்கிழமை இரவு சென்னையில் இருந்து  புறப்பட்டு முதல்வரை சந்திக்க  திட்டமிட்டுள்ளோம் என்றார்.

112 சாலைகளை சீரமைக்க கோவை மாநகராட்சி முடிவு

கோவை, செப். 15 -  கோவை மாநகரில் குண்டும், குழியு மான 112 சாலைகளை சீரமைக்க கோவை  மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.   கோவை மாநகரில்  6 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வீதிகள் உள்ளன.  மாநகரில் ஏறத்தாழ  800 கிலோ மீட்டர் தூரத்துக்கு மாநகராட்சி  சாலைகள், 200 கிலோ மீட்டர் தொலை வுக்கு மாநில நெடுஞ்சாலை, சுமார் 100  கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ் சாலைகள் செல்கின்றன.  மாநகரில் பாதாள சாக்கடைப் பணி, குடிநீர் குழாய் பதிக்க, கேபிள், தொலைபேசி, இணையதள வயர்கள் பதிக்கவும், பாதாள சாக்கடை குழாய் வீட்டு இணைப்பு வழங்கவும், 24  மணி நேர குடிநீர் திட்டத்துக்கான குழாய்கள்  பதிக்கவும் சாலைகள் அடிக்கடி தோண்டப் படுகின்றன. முயல் வேகத்தில் சாலைகள் தோண்டப்பட்டாலும், அந்த சாலைகள் சீர மைப்பு  பணி ஆமை வேகத்தில் தான் நடக் கின்றன.  தற்போதைய சூழலில், மாநகரின் பல் வேறு இடங்களில் உள்ள சாலைகள், பொது மக்கள் சிரமப்பட்டு செல்லும் வகையில் மேடு,  பள்ளங்களாகவும், குண்டும், குழிகளாகவும் காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டி கள் மட்டுமன்றி பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில இடங் களில் காணப்படும் குழிகளை முறையாக  தார் ஊற்றி சீரமைக்காமல், தற்காலிகமாக மண், ஜல்லிக்கற்களை போட்டு சீரமைக் கின்றனர். அது ஒரு தூரல் மழைக்கே பெயர்ந்து விடுகிறது. மாநகரில் ஒரு சில இடங்களை தவிர்த்து, பெரும்பாலான இடங்களிலுள்ள ஒவ்வொரு வீதியிலும் குறைந்தபட்சம் 3 முதல் 5 இடங்களில் குழிகள்  காணப்படுகின்றன. பீளமேடு, ஆவாரம் பாளையம், கணபதி, காந்திபுரம், பழையூர்,  ரத்தினபுரி-லட்சுமி புரம் சாலை, உக்கடம் -  செல்வபுரம் சாலை சந்திப்பு, புட்டுவிக்கி சாலை, தெலுங்குபாளையம், ஹோப் காலேஜ், மசக்காளிபாளையம், சவுரி பாளையம், சிங்காநல்லூர், துடியலூர், சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி உள் ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் சேதம டைந்து காணப்படுகின்றன.  இதுகுறித்து கோவை மாநகராட்சி  ஆணையர் மு.பிரதாப் கூறுகையில்,‘‘ கோவை மாநகரில் சேதமடைந்த சாலைகள்  சீரமைப்பு பணி துரிதமாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. சாலைகளை சீரமைக்க அரசு சார்பில் முதல்கட்டமாக ரூ.26 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை பயன் படுத்தி  38 கிலோ மீட்டர் தூரத்துக்கு 112 எண்ணிக்கையிலான சாலைகள் புதியதாக தார்த்தளம் அமைக்கப்பட உள்ளன.   சாலை களை சீரமைக்க மேலும் ரூ.50 கோடியை அரசிடம் கேட்டுள்ளோம். அதுவும் கிடைக்க  வாய்ப்புள்ளது,’’ என்றார்.

இரண்டு ஓடையால் உருவான ஈரோடு

ஈரோடு தினம் கொண்டாட்டம்

ஈரோடு, செப்.15- பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை ஆகிய 2 ஓடைகளின் நடுவே அமைந்த ஊர் ஈரோடு என்கிற பெயர்க்காரணம் சொல்லப்பட்டாலும், தமிழகத்தின் தவிர்க்க முடியாத எப்போதும் பேசுப்பொருளாய் இருக்கிற  ஈரோடு தினம் வெள்ளியன்று கொண்டாடப்படுகிறது.  ஈரோடு நகர பரிபாலன சபை உருவான செப்டம்பர் 16  ஆம் தேதி ஈரோடு தினமாக கொண்டாடப்படுகிறது. ஈரோடு  மாநகரம் 110 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. ஈரோடு  நகரை மாநகராட்சி என்ற கனவை விதைத்தவர் பெரியார்.  அவர் 3 ஆண்டுகள் (1917 முதல் 1920) ஈரோடு நகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டையும், வீரப்பன் சத்திரத்தையும் இணைத்து மாநகரமாக்க வேண்டும் என்ற  தீர்மானத்தை கொண்டு வந்தார். பின்னர் 90 ஆண்டுகள்  கடந்து முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால், ஈரோடு, வீரப்பன்சத்திரம், பெரிய சேமூர், சூரம்பட்டி, காசி பாளையம் நகரங்கள், பி.பி.அக்ரகாரம், சூரியம்பாளையம் பேரூராட்சிகள், திண்டல், வில்லரசம்பட்டி உள்ளிட்ட கிராம  ஊராட்சிகளை இணைத்து ஈரோடு மாநகரம் உருவானது. பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை ஆகிய  2 ஓடைகளின் நடுவே அமைந்த ஊர் ஈரோடு என்று காரணப் பெயர் கூறப்படுகிறது.  பண்டைய ஈரோடு கோட்டை, பேட்டை என்று 2 பகுதி களை மட்டுமே கொண்டு இருந்தது. கோட்டைக்கும், பேட் டைக்கும் நடுநாயகமாக இருந்தது மணிக்கூண்டு பகுதி. மணிக்கூண்டின் கிழக்கு பகுதி பேட்டை என்றும், மேற்கு  பகுதி கோட்டை என்றும் அழைக்கப்பட்டது. கோட்டை பகுதி யில் மிகப்பெரிய மண்கோட்டை இருந்தது. இந்த கோட்டை  குறித்து 7-11-1800 அன்று ஆங்கிலேய அதிகாரியான புக்கானன் என்பவர் தனது குறிப்பில் மண் கோட்டை இருந்தற் கான சான்றுகளை குறிப்பிட்டு உள்ளார். ஈரோட்டை தலைமை  இடமாக கொண்டு ஈரோடு நகர பரிபாலன சபை கடந்த 16.9.1871 அன்று அமைக்கப்பட்டது. இவ்வாறு ஈரோடு நகர சபை  உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்த இன்று  (வெள்ளிக்கிழமை) 151ஆவது ஆண்டு தொடங்கு கிறது. ஈரோடு நகர பரிபாலன சபையின் முதல் தலைவ ராக ஏ.எம்.மெக்ரிக்கர் என்பவர் நியமிக்கப்பட்டார். அவருடன்  7 நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.  ஈரோடு தினமாக (செப்டம்பர் 16) கொண்டாடப்பட வேண்டும் என்பது கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு வின் நீண்டநாள் கோரிக்கையாகும். அரசு சார்பில் ஈரோடு  தினம் கடைபிடிக்க எந்த அறிவிப்பும் இல்லை என்றாலும்,  ஈரோட்டை சேர்ந்த பல சமூக அமைப்புகள், பொதுமக்கள், சமூக ஊடகத்தினர் செப்டம்பர் 16-ந் தேதியை ஈரோடு தின மாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

நில அதிர்வு

திருப்பூர், செப். 15 - திருப்பூர் மாவட்டம், காங் கேயம் சுற்று வட்டாரப் பகுதி யில் புதன்கிழமை இரவு நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். காங்கேயத்தை சுற்றி உள்ள கிராமங்களான சிவன் மலை, ஆலம்பாடி, மரு துறை, முள்ளிபுரம், நால் ரோடு பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.  இந்த நில அதிர்வு சுமார்  10 நொடி நீடித்ததாக பொது மக்கள் கூறினர். 

கஞ்சா விற்ற இளைஞர் கைது

அவிநாசி, செப்.15- சேவூர் அருகே சூரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை  செய்வதாக வந்த தகவலையடுத்து,  காவல்துறையினர் திடீர்  சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இட மாக பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் சேவூர், தேவேந்திர நகரை சேர்ந்த  ராஜன் மகன் மணிகண்டன் ( 24) என்பதும், விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து  சேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண் டனை கைது செய்தனர். மேலும் 100 கிராம் கஞ்சாவை பறி முதல் செய்தனர்.

தாராபுரம் பகுதிகளில் நாளை மின்தடை

தாராபுரம், செப்.15- பல்லடம் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட தாராபுரம், மூலனூர், கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக சனிக்கிழமை (நாளை) 17ஆம் தேதி காலை 9 மணி  முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  மின்தடை செய்யப்படும் பகுதிகள் தாராபுரம் 110 / 22 கேவி துணை மின்நிலையத்திற்குட் பட்ட தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்க லம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம்,மடத்துப்பாளை யம், வண்ணாபட்டி, உப்பாறு டேம், பஞ்சப்பட்டி, சின்னப் புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகள். கொளத்துப்பாளையம் 110 / 22 கேவி துணை மின்நிலை யத்திற்குட்பட்ட  உப்புத்துறைபாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக் கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம்,  மேட்டுவலசு, ராமமுர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராம பட்டிணம், நகர பகுதிகளான மாரியம்மன்கோவில், அனுமந் தாபுரம், சின்னக்கடைவீதி. மூலனூர் 110 / 33-22 கேவி துணை மின்நிலையத்திற்குட் பட்ட  மூலனூர், அக்கரைபாளையம், பொன்னிவாடி, சின்னக் காம்பட்டி, போளரை, நொச்சிகாட்டுவலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, பெரமியம், லக்கமநாயக்கன்பட்டி, வடுக பட்டி, வெள்ளவாவிபுதூர், கிளாங்குண்டல். கன்னிவாடி 33-22  துணை மின்நிலையத்திற்குட்பட்ட கன்னி வாடி, மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆயிக்கவுண்டன் பாளையம், நஞ்சத்தலையூர், புஞ்சைதலையூர், மணலுhர், பெருமாள்வலசு.

தாராபுரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

தாராபுரம், செப்.15- திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இரு வேறு இடங்களில் சாலையில் சென் றவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு வரை போலீசார் கைது செய்தனர். தாராபுரம் அரசு பணியாளர் காலனி யில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவ ரது மனைவி ஈஸ்வரி (52). இவர் கடந்த  ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலையில் மளிகை கடைக்கு சென்று விட்டு அரசு  பணியாளர்கள் காலனி சாலையில் சென்று கொண்டிருந்த போது பைக்கில்  வந்த இரண்டு பேர் ஈஸ்வரியின் கழுத் தில் இருந்த மூன்று பவுன் தங்கச் சங்கி லியை பறித்துச் சென்றனர். அதே போன்று உடுமலை சாலையில் வசித்து  வரும் சந்திரசேகர் மனைவி ஜெயசுதா  (45) இவர் கெத்தல்ரேவ் பஞ்சாயத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணி யாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூன்  மாதம் 14 ஆம் தேதி அன்று காலையில்  கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தனது  ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது புறவழிச் சாலை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வழிம றித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து  சென்றனர். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தங்கச் சங்கிலிகளை பறிகொ டுத்தவர்கள் தாராபுரம் குற்றபிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தி ருந்தனர். புகாரின் பேரில் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் தன ராசு, ஆய்வாளர் மணிகண்டன் ஆகி யோர் தலைமையில் காவலர்கள் முத் துக்குமார், பாலு, விக்கி, ஆகியோர்  அடங்கிய தனிப்படை போலீசார் குற்ற வாளிகளை தேடி வந்தனர். இந்த நிலை யில் ஏரகாம்பட்டி சோதனை சாவடியில்  வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த னர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு  பேரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதோடு பைக்கை விட்டு விட்டு  தப்பியோட முயன்றனர். அவர்களை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து  தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணை யில் தேனி மாவட்டம், அணைக்கரை பட்டியை சேர்ந்த ராம்ராஜ் என்பவர் மகன் ஒண்டிவீரன் என்ற கார்த்திக்(30), திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கேடிஎம் மில் எதிரே வசித்து வரும்  அப்பாதுரை என்பவரது மகன் ஜெகதீஷ் (27)  இரண்டு வழிப்பறி சம்ப வங்களிலும் ஈடுபட்டதை ஒப்புக்கொண் டனர். மேலும் விசாரணையில் ஏற்க னவே இருவரும் பல குற்ற வழக்குக ளில் சிறை தண்டனை பெற்று சிறைச்சா லையில் இருந்த போது ஒண்டிவீரன் என்ற கார்த்திக்கும், ஜெகதீசும் நண்ப ராக பழகியுள்ளனர். அதன் பிறகு  நீதி மன்ற ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இருவரும் ஒன்றிணைந்து கூட்டு சதி  செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு  வந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள்  மீது ஏற்கனவே ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேர் மீதும் வழக்குபதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இன்று மின் தடை 

இன்று மின் தடை  அவிநாசி, செப்.15- கருவலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (இன்று)  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. மின் தடை செய்யப்படும் பகுதிகள்: கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம்,ஆரியக்கவுண்டன்பாளையம்,  அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர்,காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபா ளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளை யம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம்.

கல் குவாரிக்கு எதிராக உண்ணாவிரதம் தொடங்கிய பெண்கள் கைது

திருப்பூர், செப். 15 - கோடங்கிபாளையத்தில் முறைகேடாக இயங்கும் கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய பத்து பெண் களை காவல் துறையினர் கைது செய்தனர்.  திருப்பூர் மாவட்டம், பல்லடம் கோடாங்கிபாளையத்தில் செயல்பட்டு வரும்  எஸ்.ஜி. கல் குவாரி விதிமீறல்களை கண் டித்து, கடந்த 10 நாட்களாக விவசாயி செந்தில் குமார் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகி றார். அவரது போராட்டத்துக்கு ஆதரவாக, அவரின் மனைவி கலைச்செல்வி தலைமை யில் 10 பெண்கள் வியாழக்கிழமை உண்ணா விரத போராட்டத்தை மேற்கொண்டனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, நொய்யல் நொய்யல் ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.திரு ஞானசம்பந்தன் ஆகியோர் முன்னிலையில்,   பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் முறைகே டாக இயங்கும் குவாரிகளின் உரிமத்தை ரத்து  செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய 10 பெண்கள்  மற்றும் அவர்களின் போராட்டத்துக்கு ஆதர வளித்த 25 பேரை போலீசார் கைது செய்து  திருப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அங்கு போலீசார் வழங்கிய மதிய உண வையும் புறக்கணித்து, தொடர்ந்து உண் ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, குவாரி  உரிமையாளர்களால் கரூரில் வாகனம் ஏற்றி  படுகொலை செய்யப்பட்ட ஜெகநாதனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

செப்.18இல் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருப்பூர், செப். 15 - திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி சிறப்பு  முகாம் நடைபெறுகிறது. திருப்பூர் மாநகராட்சியில் 190 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இம்மு காம் நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய இடங் களில் கோவிட் 19 தடுப்பூசி மருந்து இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பணிக்காக சுகாதாரத் துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளர்கள்  மற்றும் தன்னார்வலர்கள் என 1,140 பேர் ஈடுபடவுள்ளனர். இதற்கு தேவையான மருந்துகள்:  கோவிட் சீல்ட்டு – 14,830 டோஸ், கோவேக்சின் – 32,200 டோஸ், கார்பிவேக்ஸ் – 6,380 டோஸ் என  மொத்தம் 53 ஆயிரத்து 410 டோஸ்கள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த  வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

காங்கேயம் பகுதியில் உணரப்பட்ட நில அதிர்வு

திருப்பூர், செப்.15- திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சுற்று வட் டாரப் பகுதியில் புதன்கிழமை இரவு நில  அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள்  கூறினர். காங்கேயத்தை சுற்றி உள்ள கிராமங்க ளான சிவன்மலை, ஆலம்பாடி, மருதுறை, முள்ளிபுரம், நால்ரோடு பகுதியில் இந்த நில  அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு சுமார் 10 நொடி நீடித்ததாக பொதுமக்கள் கூறினர். இத னால் வீட்டிற்குள் இருந்து பொதுமக்கள்  வீதிக்கு ஓடி வந்தனர். நில அதிர்வின் காரண மாக ஏற்பட்ட பீதியால் இரவு முழுவதும்  பொதுமக்கள் பலர் தூங்காமல் தவித்ததாக  கூறினர். நில அதிர்வின்போது பெரிய சத்தம்  ஒன்று கேட்டது. அப்போது வீட்டில் இருந்த  பொருட்கள், பாத்திரங்கள், கட்டில், மேஜை  ஆகியவை குலுங்கியது. இதனால் வீட்டில்  இருந்தவர்கள் பீதியடைந்து அலறியடித்து  வெளியே ஓடி வந்தோம் என்றனர். அதேசம யம் நில அதிர்வு குறித்து வருவாய்த் துறை யினரை தொடர்பு கொண்டபோது, அது தொடர்பான விபரம் இல்லை என்று கூறினர். கடந்த ஓரிரு மாதங்களுக்கு உள்ளாக இது  போல் இரண்டு மூன்று முறை நில அதிர்வு ஏற் பட்டுள்ளது. எனினும் இது இயற்கையாக ஏற்பட்ட நில அதிர்வு இல்லை. மேற்கண்ட கிரா மப்புற பகுதிகளில் கல் குவாரிகள் அதிக  அளவு செயல்படுகின்றன. விதிமுறைக்குப் புறம்பாக, அவர்கள் அளவுக்கு அதிகமான வெடி மருந்துகளை பயன்படுத்தி குவாரிக ளில் கற்களை பெயர்த்து எடுக்கிறார்கள். இத னால் ஏற்படும் சப்தம்தான் மிகப்பெரும் வெடிச்சத்தமாக, நில அதிர்வாக உணரப்பட் டது என்று அப்பகுதியைச் சேர்ந்த தொழிலா ளர்கள் சிலர் தெரிவித்தனர்.

விசைத்தறி மின் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் இன்று தொடக்கம்

திருப்பூர், செப்.15 - சாதா விசைத்தறிகளுக்கு விதிக்கப்பட் டுள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்  வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் செய் வதென்றும், அந்த வேலை நிறுத்தம் வெள் ளிக்கிழமை (இன்று) காலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெறும் என்றும் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும்  விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அறி வித்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு  நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் கள் சங்க பொதுக்குழு கூட்டம், திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டை அருகே கோம் பக்காடு புதூரில் வியாழக்கிழமை நடந்தது. சங்கத் தலைவர் சி.பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் பி.குமாரசாமி முன் னிலை வகித்தார். துணைத் தலைவர் பி. கோபாலகிருஷ்ணன், துணை செயலாளர்  ஈஸ்வரன், பொருளாளர் ச.ஈ.பூபதி ஆகிய  நிர்வாகிகள் உள்பட விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: சாதா விசைத்தறிக்கு 3ஏ2  வுக்கு மிக அபரிமிதமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடி யாக இதை திரும்பப்பெற்று, 3ஏ2-வுக்கு  முழு விலக்களிக்க வேண்டும். சாதா விசைத் தறித் தொழிலையும், பல லட்சம் விசைத்தறி  தொழிலாளர்கள் மற்றும் சார்பு தொழிலாளர் களின் குடும்ப வாழ்வாதாரத்தை காப்பற்ற  வேண்டும் என தமிழக அரசை இப்பொதுக் குழு ஏகமனதாக கேட்டுக்கொள்கிறது.  தமிழக மின் துறை அமைச்சர், செய்தித் துறை அமைச்சர், மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர், மின்வாரியத் தலை வர் உட்பட அனைவரையும் நேரில் சந்தித்து  வலியுறுத்தியும், சாதா விசைத்தறிக்கு அப ரிமிதமாக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி  உள்ளது. எனவே உயர்த்திய மின் கட்ட ணத்தை சாதா விசைத்தறிக்கு முழுமையாக விலக்கு அளித்து, விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும். கடந்த 10ஆம் தேதி  முதல் சாதா விசைத்தறிக்கு உயர்த்திய மின்  கட்டண அளவில் கணக்கீடு செய்யப்படும்  மின் கட்டணத்தை சாதா விசைத்தறியாளர் கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக முழுமை யாக மின் கட்டணம் கட்டாமல் இருப்போம்.  தற்போது அனைத்து சிலாப்புகளுக்கும் 30  சதவீதம் மின் கட்டணம் உயர்த்தினால் சாதா  விசைத்தறி தொழிலே அழிந்துவிடும்.

ஆண் டுக்கு 6 சதவீதம் மின் கட்டண உயர்வு என்பது  கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறித் தொழிலை முழுமையாக அழித்து விடும்.  இந்த முடிவுகளை அரசு கைவிட வேண்டும்.   3ஏ2-வுக்கு உயர்த்திய 30 சதவீத மின் கட்டணத் தையும், ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்வையும்  முழுமையாக விலக்கு அளித்து அரசு அறி விக்கும் வரை, செப்டம்பர் 16ஆம் தேதி காலை  6 மணி முதல், விசைத்தறியாளர்கள் காலவ ரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பொதுக்குழு தீர்மானம் குறித்து  கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு  செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங் கத்தின் தலைவர் சி.பழனிசாமி கூறுகையில், கடந்த கால் நூற்றாண்டு காலமாக தமிழக  அரசு, விசைத்தறியாளர்களுக்கு ஆதரவாக  இருந்தது. ஆனால் தற்போது மின் கட்டண உயர்வின் மூலம் விசைத்தறியாளர்களை கைவிட்டுள்ளது. இதனால் எங்களின் தொழில் நிச்சயம் பாதிக்கப்படும். ஏற்கனவே  கொரோனா தொற்று, பருத்தி மற்றும் நூல்  விலை உயர்வால் ஆர்டர்கள் குறைந்து விட் டன. இந்த கட்டண உயர்வால், ஒவ்வொரு விசைத்தறி கூடங்களிலும் ரூ. 7ஆயிரம் முதல்  ரூ. 10 ஆயிரம் வரை கூடுதலாக மின் கட்டணம்  செலுத்த நேரிடும். தற்போது தொழில் இருக் கும் மோசமான நிலையில் இது கூடுதல் சுமை யாகும். ஆகவே அரசு மின் கட்டண உயர்வை  திரும்பப் பெறும்வரை, விசைத்தறி கூடங் களை மூடி காலவரையற்ற போராட்டத்தை தொடங்குகிறோம் என்றார்.

குப்பைத்தொட்டியில் மீட்கப்பட்ட கை

கோவை, செப்.15- துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் குப் பைத்தொட்டியில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட 45  வயது மத்திக்கத்தக்க ஆணின் இடது கை மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், துடியலூரை அடுத்துள்ள வெள்ளக் கிணறு பிரிவு வி.கே.எல் நகர் பகுதியில் வியாழனன்று காலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனம் மூலம் குப் பைத்தொட்டியிலிருந்து குப்பைகளை அள்ளிக்கொண்டி ருந்தனர். அப்போது பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில், இரண்டு துண்டுகளான ஆணின் கை கிடந்துள் ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தூய்மை பணியா ளர்கள், துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித் துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், பெரியநாயக்கன் பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உள்ளிட்ட காவல் துறையினர் விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து இரண்டு துண்டுகளாகக் கிடந்த அந்தக் கையை ஆய்வு செய்தபோது, அது 45 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மேற்கொண்டு விசாரணை செய்ய கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல் துறையினர் அக்கம் பக்கத்திலுள்ள கண் காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அருகிலுள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அதேபோல் உடலின் மற்ற பாகங்கள் அருகில் ஏதேனும் வீசப்பட்டுள்ளனவா? என அருகிலுள்ள குப்பைத்தொட்டி களை ஜேசிபி இயந்திரம் மூலம் தேடி வருகின்றனர்.  வெட்டப்பட்ட நிலையில் குப்பைத்தொட்டியில் ஆணின் கை கிடப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

சொத்து வரியை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு, செப். 15- தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை கைவிடக்கோரி ஈரோடு வரி செலுத் துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம், வீட்டு உரிமை யாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இனைந்து ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சொத்து வரி உயர்வை அரசு  மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதே போல தேர்தல் வாக்குறுதியின்படி குப்பை  வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே கட்டிடத்தின் முன்புற வணிக பயன்பா டும், பின்புறம் குடியிருப்பு பகுதியாக இருந் தால் ஒட்டு மொத்தமாக வணிகத்துக்கு உரிய வரி விதிக்காமல் பயன்பாட்டிற்கு ஏற்றாற் போல் வரி சதவிகிதத்தை குறைக்க வேண் டும். நகராட்சிகளில் இருப்பதைபோல மாநக ராட்சியில் மேயர், துணை மேயர் தலைமை யில் வரி மேல்முறையீட்டுக்குழு அமைக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும். மாநகராட்சி முறையாக அறிவிக்கை வழங்கி கட்டிட உரி மையாளர்களிடம் வரி வசூலிக்க வேண்டும்  என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினத்திடம் அளித்தனர்.

நவீன சலவையகம் அமைக்க மானியம்

நவீன சலவையகம் அமைக்க மானியம் ஈரோடு, செப்.15- நவீன சலவையகங்கள் அமைக்கும் திட்டத்தில் ரூ.3 லட் சம் நிதியுதவி பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக 10  பேரைக் கொண்ட குழுவை அமைத்து நவீன சலவையகங் கள் அமைக்க தலா ரூ.3 லட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 மையங்களை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் 10 நபர்க ளைக் கொண்ட ஒரு குழு அமைத்து அக்குழுவுக்கு நவீன முறை சலவையகம் அமைக்க தேவைப்படும் உபகரணங்கள் வாங்க  தோராயமாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். இதற்கான  பயனாளிகளில் குழு உறுப்பினா்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆக இருக்க வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலமாக பயிற்சி பெற்ற  நபர்களாக இருக்க வேண்டும். குழுவில் உள்ள பயனாளி களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள, தகுதியான குழு வினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல்  கட்டடம் 4 ஆவது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மாடு திருட்டு

கோவை, செப்.15-- கோவை நீலாம்பூர் பகு தியைச் சேர்ந்த செல்வ குமார். இவர் வீட்டில் மாடு களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் இரவு நாய்கள் சத்தமிட்ட தால் சென்று பார்த்தபோது மாடுகளை காணவில்லை. இதன்பின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த தில், மாட்டை ஒருவர் ஓட்டி செல்லவதும், இருட்டு பகு தியில் கட்டி வைப்பதும் பதி வாகியிருந்தது. இதுகுறித்து சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.





 

;