districts

img

தருமபுரியில் விரைவில் அரசு செவிலியர் கல்லூரி : செந்தில்குமார் எம்.பி.,

தருமபுரி, அக்.10- தருமபுரியில் விரைவில் அரசு செவிலியா் கல்லூரி தொடங்குவதற் கான அறிவிப்பை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ்.செந்தில் குமார் தெரிவித்துள்ளர்.  இதுகுறித்து, டி.என்.வி.எஸ்.செந் தில்குமார் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் செவிலியர் கல்லூரி தொடங்க பூர்வாங்கப் பணிகள் நடை பெற்று வருகின்றன. தருமபுரியில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருவதால், இங்கு அரசு செவிலியர் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என இந்த மாவட்ட மக்கள் நீண்ட  நாள்களாக கோரிக்கை  விடுத்து வந்தனர்.தருமபுரி மற்றும் அருகா மையில் உள்ள மாவட் டங்களில் தனியார் செவி லியர் கல்லூரிகள் மட்டுமே அமைந்துள் ளது. அரசு செவிலியர் கல்லூரி இது வரை தொடங்கப்படவில்லை. இந்த தருமபுரி மாவட்ட மாணவ, மாணவி யா், அதிக கட்டணங்களை செலுத்தி தனியார் கல்லூரியில் பயில  வேண்டிய நிலையில் உள்ளனர்.  ஆகவே, இந்த பகுதி மாணவ,  மாணவியர் நலன் கருதி யும், ஏற்கெனவே அரசு மருத்துவக் கல்லூரி முந்தைய திமுக ஆட்சி யில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவதால், தற்போது அரசு செவி லியா் கல்லூரி மற்றும்  பயிற்சிப்பள்ளி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந் தேன். இக்கோரிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் பரிசீலித்து நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தருமபுரியில் அரசு  செவிலியா் கல்லூரியைத் தொடங்க  பூர்வாங்க பணிகளை தற்போது தமி ழக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன் மைச் செயலாளா் மேற்கொண்டுள் ளார். மேலும், தருமபுரியில் செவிலி யா் கல்லூரிக்கு தேவையான கட்டட வசதி, விடுதி வசதி, அமைவிடம் ஆகியவை குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதற் கான முன்மொழிவுகள் பெறும் பணி கள் யாவும் முடிவற்றவுடன், தருமபு ரியில் அரசு செவிலியர் கல்லூரி யைத் தொடங்குவதற்கான அறி விப்பை தமிழக முதல்வர் விரை வில் வெளியிட உள்ளார் என தெரி வித்துள்ளார்.

;