உடுமலை, டிச.16- பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்திற் கான இடத்தை தரக்கோரி விவசாய தொழிலாளர் சங் கத்தினர் மடத்துக்குளம் வட்டாட்சியரிடம் மனு அளித்த னர். இதுதொடர்பாக, அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் மடத்துகுளம் தாலுகா செயலாளர் ஆறு முகம் தலைமையில் மடத்துக்குளம் வட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, மடத்துக்குளம் தாலுகா, பெருமாள்புதுார் பகுதியில் பழங்குடியின சமூ கத்தை சேர்ந்த காட்டு நாயக்கர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இம்மக்களின் தொடர் கோரிக்கைக ளுக்கு பிறகு கடந்த 2005 ஆம் ஆண்டு பத்துக்கும் மேற் பட்ட பழங்குடியின மக்களுக்கு இலவச பட்டா வழங்கப் பட்டது. ஆனால், அதற்குரிய இடம் அளந்து கொடுக்கப் படவில்லை. ஆகவே, தங்களுக்குரிய நிலத்தை அளந்து கொடுக் கும்படி பல முறை வருவாய்த் துறையினரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அண்மை யில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல் வராஜ் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். ஆனால், இதன்பின்னரும் இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற் கொண்டு, உட னடியாக அவர்களுடைய நிலத்தை அள வீடு செய்து கொடுக்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.