ஈரோடு, அக்.6- அனைத்து கட்டுமான தொழிலா ளர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் நலவாரிய அலுவல கம் முன் வியாழனன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. அனைத்து கட்டுமான தொழிலா ளர்களுக்கும் நலவாரியத்திலி ருந்து தீபாவளி போனஸ் ரூ.5 ஆயி ரம் வழங்க வேண்டும். முந்தைய அரசு வழங்கியது போல் பொங்கல் பரிசு, இலவச வேட்டி, சேலை வழங்க வேண்டும். பெண்களுக்கு 55 வயதில் பென்சன் ரூ.3 ஆயிர மாக உயர்த்தி வழங்க வேண்டும், வீடு கட்டும் திட்டத்தை எளிமை யாக்க வேண்டும். மாவட்டங்களில் தேங்கியுள்ள விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் நலவாரிய அலு வலகம் முன்பு சிஐடியு சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட தலைவர் எச்.ஸ்ரீராம் தலைமை வகித்தார். இதில், சிஐ டியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ர மணியன், சங்க மாவட்ட செயலா ளர் எஸ்.மாதவன், பொருளாளர் கே.பழனிசாமி ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் சி.கே.முருகேசன், ஆர்.நடராஜ், ஆர்.சரோஜா, ஆர்.நடேசன், ஏ.பி.மாதவன் மற்றும் சி.பெருமாள் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.
சேலம்
கட்டுமான தொழிலாளர்க ளுக்கு போனஸ் வழங்க வலியு றுத்தி தமிழகம் தழுவிய பெருந்தி ரள் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி யாக சேலம் கோரிமேடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவல கம் முன்பு கட்டுமான சங்க மாவட்ட தலைவர் சி.மயில்வேலன் தலை மையில் நடைபெற்றது. கோரிக்கை களை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதயகுமார் மாவட்ட செயலாளர் ஏ.கோவிந்தன், மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கட பதி, கட்டுமான சங்க மாநில துணை செயலாளர் சி.மோகன், மாவட்ட செயலாளர் செ.கருப்பண்ணன் ஆகியோர் உரையாற்றினர். இதில், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள், கட்டு மான தொழிலாளர்கள் ஏராளமா னோர் பங்கேற்றனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட கட்டிட கட்டு மான தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். ராஜேந்திரன் தலைமை தாங்கி னார். இதில், சிஐடியு மாவட்ட தலை வர் எம்.அசோகன். சங்க மாவட்ட செயலாளர் கு.சிவராஜ், மாவட்ட பொருளாளர் கே.கண்ணன், துணைத் தலைவர் ஜி. பழனியம்மாள் ஆகி யோர் கோரிக்கை விளக்கவுரை யாற்றினர். இதில், மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.ராணி, மாற் றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.