திருப்பூர் ஜூலை 6 - திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் வரும் சனியன்று பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் வரும் 8- ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து வட்டங்களிலும் நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு முகா மில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண இருக்கிறார்கள். அதன்படி அவிநாசியில் பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாராபுரம் நஞ்சைத்தலையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் திலும், காங்கயம் வடுகபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், மடத்துக்குளம் கடத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், பல்லடம் அனுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், திருப்பூர் வடக்கு நெருப் பெரிச்சல் தொடக்க வேளாண்மை கூட் டுறவு கடன் சங்கத்திலும், திருப்பூர் தெற்கு விஜயாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தி லும், உடுமலை சிந்திலுப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தி லும், ஊத்துக்குளி மொரட்டுப்பாளை யம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், அலை பேசி எண் பதிவு செய்தல் போன்ற மின் னணு குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது.