districts

img

உற்சாகம் சுமந்த தை - - ஜீவி

எத்தனை போகியாய்
எரித்தாலும்
குவிந்துவிடுகின்றன
குப்பைகள்.

விலைவாசி முட்டி
காயம்பட்டுக்கதறுகிறது
பொருளாதாரம்.

அடிக்கரும்பு அல்ல
பொழுதுகள்
அடிக்கவரும் கம்பு.

வீட்டு வாசலில் 
மாக்கோலம் 
விழி வாசலில்
நீர்க்கோலம்.

இஞ்சி மஞ்சள்
அன்று.
நெஞ்சில் கவலை
இன்று.

அதிகம் சூடுபட்டால்
ஆவேசம்கொண்டு
பொங்கும்பானை.

உழவர்கள் ஜெயித்ததால்
இத்தை
உற்சாகம் சுமந்த தை.
வரும் தை
வருத்தத்தை போக்கட்டும்.