districts

கொத்தடிமைகளாக தொழிலாளர்கள் வேடிக்கை பார்க்கும் தொழிலாளர் துறை

சுத்திகரிப்பு நிலையம் இல்லாத  சாய ஆலைக்கு  சீல் வைக்கும் வரு வாய்த்துறையினர், கொத்தடிமை களைப் போல வேலை வாங்கப் படும் போது தொழிலாளர் துறை வேடிக்கை பார்க்கிறதே என தொழிலாளர்கள் ஆதங்கத்துடன் குமுறலை வெளிப்படுத்தினர். சீனாவில் உள்ளதைப் போல பருத்தி நேராக துணியாக வருவ தில்லை. இங்கே பருத்தி, பஞ்சாகி,  நூலாகி, பின்னர் துணியாகிறது. இதற்கு ஸ்பின்னிங் மில் எனப் படும் பஞ்சாலையில் நூலாகி பின்னர் சாய, சலவை பட்டறை களுக்குச் சென்று துவைத்து, சாய மேற்றிக் கொண்டு தான் தறிக்கு வந்து பின்னர் துணியாகிறது. அதன் பிறகும் சலவைக்குச் சென்று பின்னர் பிரிண்டிங்கிற்குச் செல்வதும் உண்டு. இவ்வாறு ஜவுளி தொழிலுக்கு சலவை மற்றும் சாய ஆலைகள் அவ சியம்.  ஈரோடு மாவட்டத்தில் விவ சாயம் சார்ந்த, ஜவுளி தொழிலும் நிறைந்த பகுதியாகும். தேவைக் கேற்ப இங்கு சலவை மற்றும் சாயத்தொழிற்சாலைகள் சுமார் 100  உள்ளது. இவற்றில் தற்சமயம் இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஒவ்வொரு ஆலை யிலும் தொழிலாளர்கள்,  ஜிகிர்  எனப்படும் எந்திரம் இயக்குபவர் கள், மேற்பார்வையாளர்கள், மாஸ்டர்கள், மேலாளர், கணக் காளர், சரக்குகளை ஏற்றி வர வாகன ஓட்டிகள், அவற்றை ஏற்றி,  இறக்க என சுமார் 5 ஆயிரம்  தொழி லாளர்கள் உள்ளனர். 4 இயந்திரங் களை வைத்திருந்தால் அது பெரிய  ஆலை. 10 அல்லது அதற்கு மேலும்  ஜிகிர்கள் உள்ள இரண்டு, மூன்று  ஆலைகளும் உள்ளது.

இவற்றில் நீதிமன்ற தலையீட் டிற்குப் பின் சுத்திகரிப்பு நிலையம்  இல்லை என்றால் மின் இணைப் பை துண்டிப்பது, சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைக்கு மாசு  கட்டுப்பாட்டு வாரியமும், வரு வாய்த்துறையினரும் மேற் கொண்டு வருகின்றனர். ஆனால் இங்கே வேலை செய்யும் தொழி லாளர்  வேலை நேரம், பாதுகாப்பு  உபகரணங்கள், சம்பளம், சட்ட  சலுகை அமலாக்கம் ஆகிய வற்றைப் பற்றி நடவடிக்கை எடுக்க  வேண்டிய தொழிலாளர் துறை யின் நடவடிக்கை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 12 மணி நேரம் வீதம்  ஒரு நாளில் இரண்டு சிப்ட் தொழி லாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகு வந்த கொரோனா தொற்றையடுத்து  மீண்டும் நலிவடைந்து தற்சமயம் ஒரு சிப்ட் வேலை தான் நடக்கிறது.  அந்த வேலையாவது மாதம் முழுவதும் கிடைக்கிறதா என்றால்  இல்லை. மாதத்தில் 20 நாட் களுக்கும் குறைவாகவே வேலை  கிடைக்கிறது. அவர்களுக்கு  வழங்கப்பட்ட 2 நாள் விடுமுறை யுடன் மாத சம்பளம் வழங்கப் பட்டு வந்தது. கொரோனாவிற்குப்  பிறகு மாதம் 2 நாள் விடுமுறை  என்பது இல்லாமல் போனது. வேலை இருந்தால் மட்டும் சம்பளம்,  இல்லை என்றால் கூலி இல்லை  என்னும் நிலை உருவாகியுள்ளது. 8 மணி நேர வேலை என்பது இந்த  ஆலைகளில் நடைமுறைப்படுத்தப்  படுவதில்லை. குறைந்தபட்ச கூலி சட்டம் அமலாகவில்லை.  எந்த வேலையிலும் தொழில் சம்பந் தப்பட்ட வியாதிகள் வரும். 

ஆனால், இத்தொழிலில் ஈடு பட்டுள்ள தொழிலாளர்களுக்கு, தோல் நோய்கள், குடல் புண்கள், ஆஸ்துமா, டிபி உள்ளிட்டவை தாக்க வாய்ப்புள்ளது. ஆனால் இஎஸ்ஐ வசதி கிடையாது. வருங் கால வைப்பு நிதி பிடித்தம் இல்லை.  குறிப்பிட்ட நாள் தொடர்ந்து வேலை செய்தால் பணி நிரந்தரம் என்பதும் இல்லை.  பவள விழா கொண்டாடும் சுதந்திர நாட்டில் ஜவுளி தொழிலில்  ஒரு அங்கமாக உள்ள தொழிலா ளியின் நிலை இதுதான் என்பது  வேதனையே. மாட்டை துன்புறுத்தி னால், நாயை பிடித்தால் ஓடோடி  வரும் அமைப்புகள், மனிதர்கள்  தொழிலாளர்கள் கொத்தடிமை களாக உழைப்பை சுரண்டுவதை  எந்த ஆட்சி, அதிகார அமைப்பு களும் தலையிடவில்லையே என் கிற ஆதங்கம் தொழிலாளர்களிடம் உள்ளது. பார்வையை அரசு  திருப்ப வேண்டும், பரிவோடு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே இத்தொழி லாளர்களின் எதிர்பார்ப்பு.

-சக்திவேல், ஈரோடு.