districts

img

வாலிபர் சங்கம் முற்றுகை - போலி கல்வி நிறுவனத்திற்கு சீல்

சேலம், அக் 14 - சேலத்தில் தலித் மாணவிகளை குறிவைத்து போலி கல்வி நிறுவனம்  நடத்தி கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட கல்லூரியை இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். அதனைத் தொடர்ந்து மாவட்ட  நிர்வாகம் போலி கல்வி நிறுவனம் குறித்து விசாரணை மேற்கொண்டு சீல் வைத்தனர்.  சேலம் ஐந்து ரோடு பகுதியில் கிதியோன் என்ற பெயரில் அரசு  அங்கீகாரம் இல்லாமல் போலியாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் தமிழகம் முழுவதி லும் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற் பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த தலித் மாணவிகள் அதிக  எண்ணிக்கையில் பொய் வாக் குறுதிகள் அளிக்கப்பட்டு நர்சிங், ஆசிரியர் பயிற்சி, சமையல் கலை  உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படு வதாக விளம்பரப்படுத்தப்பட்டு சேர்க்கை நடத்தியுள்ளனர். சேர்க்கை நடத்திய மாணவி களுக்கு இதுவரை எந்த ஒரு வகுப் பும் எடுக்காத நிலையில் குறிப்பாக நர்சிங் படிக்க 27 ஆயிரம் ரூபாய் கட்ட ணம் வசூலித்துள்ளனர். வசூலித்த பிறகு சேலம் மாநகரில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் உத வியாளர்களாக பணியில் சேர்த்து  விட்டுள்ளனர்.

கடந்த மூன்று மாத மாக எந்த வகுப்பும் நடைபெற வில்லை. மாணவிகள் கேள்வி எழுப் பியபோது விரைவில் வகுப்புகளில் பாடம் நடத்தப்படும் என கல்லூரி யின் முதல்வர் விக்டோரியா தெரி வித்துள்ளார். இதனால் சந்தேகம டைந்த மாணவிகள் போலி கல்வி  நிறுவனம் குறித்து இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினரிடம் தெரி வித்தனர். இதனைத்தொடர்ந்து சம் பந்தப்பட்ட போலி கல்லூரியை வாலிபர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது சம்பந்தமாக மாவட்ட நிர்வா கத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டு கல்லூரியில் விசாரணை மேற்கொண் டனர். அங்கீகாரம் இல்லாத கல்லூரி நிர்வாகம் 18 வயதிற்கு கீழ் உள்ள  மாணவிகளை மருத்துவமனையில் வேலைக்கு அனுப்பியது, முறை கேட்டில் ஈடுபட்டது, கட்டணம் என்ற  பெயரில் கொள்ளை அடித்தது, மதிப்பெண் சான்றிதழ்களை வழங் காமல் இழுத்தடிப்பது உள்ளிட்ட குற்றங்களை செய்த போலி கல் லூரி நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் திவ்யா உள் ளிட்ட திரளானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் சான் றிதழை வருவாய்த்துறை அதிகாரி கள் பெற்றுக் கொடுத்தனர். மேலும், போலி கல்வி நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.