districts

img

பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

பொள்ளாச்சி, ஜுலை 15- பொள்ளாச்சி 17ஆவது வார்டு பகுதியில் பாலம் கட்டு வதற்கு சனியன்று அடிக்கல் நடப்பட்டன.   கோவை மாவட்டம், பொள்ளாச்சி 17ஆவது வார்டுக் குட்பட்ட அழகப்பா மில் வீதியில் பாலம் கட்டுமாறு பொது மக்களின் நீண்ட காலமாக கோரிக்கை  விடுத்து வந்தனர். இக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், புதிய பாலம் கட்டு வதற்கான அடிக்கல் நடும் விழா நடைபெற்றது. இந்த விழா விற்கு, நகர் மன்ற உறுப்பினர் கந்தமனோகரி தலைமை  வகித்தார். வட்டச் செயலாளர் கே.பி. மணிகண்டன் முன் னிலை வகித்தார். பொள்ளாச்சி நகர் மன்ற தலைவர் சியாமளா  நவநீதகிருஷ்ணன் அடிக்கல் நட்டு கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில், திமுக  நகர துணை செயலாளர் ச.தரும ராஜ், பாத்திமாஅக்பர், நகர மன்ற உறுப்பினர்கள் விஜய காயத்திரி, கவிதா, நிலாபர்நிஷா மற்றம் பேங்க் விஜய குமார், சம்பத், சுரேஷ் மற்றும்   பொதுமக்கள்   பெருந்திரளாக  கலந்து கொண்டனர்.