districts

img

கொடுத்தவன் பறிப்பதற்குள் பட்டா வழங்கு

சேலம் மாவட்டம், பனமரத் ்துப்பட்டி ஊராட்சி ஒன் றியத்தில் மூக்குத்திபா ளையம் உள்ளது. இந்த சிற்றூராட் சிக்குட்பட்ட நாகமரத்துகாடு கொச வன் குட்டை பகுதியில் 50க்கும் மேற் பட்ட அருந்ததியர் மக்கள் குடியி ருந்து வருகின்றனர். வீடு என பெயர ளவில் பாதுகாப்பில்லாத குடியி ருப்புகளில் வாழ்ந்துவரும் இந்த மக் களின் நீண்ட நாள் கோரிக்கை வீட்டு மனைப்பட்டா என்பதே. 60 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகு தியை சேர்ந்த வேற்று சமூகத்தை சேர்ந்த திருப்பதி என்பவரின் மகன் பொன்னுபையன் குடும்பத்தினர், அருந்ததியர் மக்கள் பயன்பாட்டிற்கு சுமார் 33 சென்ட் நிலத்தை வழங்கி யுள்ளனர். பொன்னுப்பையன் குடும் பத்தினரும் இந்நிலத்தின் முன்பகுதி யிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந் நிலையில், பொன்னுபையன் குடும் பத்தினர் குடியிருக்கும் இடம், நீர் வழி புறம்போக்கு என்பதால் அதை அரசு எவிக்சன் செய்ய வருவாய்த்துறை முடி வெடுத்துள்ளது. ஆனால் மற்ற குடி யிருப்பு பகுதிக்கு எந்த பாதிப்பும் இல் லாததால் திருப்பதி குடும்பம் வழங் கிய நிலத்தை திரும்பி தருமாறு அங்கு குடியிருக்கும் அருந்ததிய  மக்களிடம் கேட்டு வருகின்றனர். இதனால் அருந்ததியர் மக்கள் செய்வதறியா மல் தவிர்த்து வருகின்றனர்.

கொசவன்குட்டை பகுதி மக்கள் பயன்படுத்துவதற்காக அரசு சார்பில்  சுகாதார வளாகம், குடிநீர் தொட்டி, ஆழ்துளை கிணறு, கிராம சேவை மைய கட்டிடம், தொலைக்காட்சி பெட்டி அறை உள்ளிட்ட அரசு  கட்டிடங்கள் பல கோடி மதிப்பில் கட் டப்பட்டுள்ளது. முறையாக பயன்ப டுத்தாத நிலை இருப்பினும் அரசின் வருவாய் முமுமையாக செலவு செய்து கட்டிடங்கள் உள்ளது. தற் போது அப்பகுதி மக்களின் பயன்பாட் டில் இருக்கிறது. நிலம் கொடுத்த திருப்பதி குடும்பத்தினருக்கு நிலங் களை திருப்பி கொடுத்தால் அது இனி தனிப்பட்ட மனிதருக்கு போய் சேரும் நிலை ஏற்படும். எனவே அரசு இப்பிரச் சனையில் உரிய தலையீடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மற் றும் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் முனியன் (எ) ராமசாமி கூறு கையில், இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் பல ஆண்டு களாக திருப்பதி குடும்பத்தினர் வழங் கிய 33 சென்ட்நிலத்தில் சிறு சிறு குடியி ருப்புளை கட்டி வாழ்ந்து வருகிறோம். எங்களின் அடிப்படை தேவைகளுக்கு எனது காலத்தில் தொலைக்காட்சி பெட்டி அறை, சுகாதார வளாகம், மேல் நிலை குடிநீர்தொட்டி உள்ளிட்டவை களை கட்டி கொடுத்துள்ளேன். ஆனால் தற்போது அது முறையாக இல்லை. பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்தாத நிலை உள்ளது. சாலை கூட முறையாக  இல்லை. இருபுறமும் செல்லமுடியாத அளவிற்கு முள் புதர்கள் வளர்ந்து சாலை குறுகலாக உள்ளது. இப்பிரச் சனைகளை தற்பொதைய ஊராட்சி தலைவரிடம் தெரிவித்துள்ளோம். ஆனால், தற்போது நாங்கள் குடியி ருக்கும் குடியிருப்பு பகுதிக்கும் ஆபத்து வந்துள்ளது. திருப்பதி குடும்பத்தினர் பல ஆண்டுகளை கடந்து நிலத்தை திருப்பி கேட்டால் தற்போது நாங்கள் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறோம். தனிநபராக இல்லா மல் இந்த பகுதி ஊராக மாறி உள்ள  நிலையில் புதிய பிரச்சனை எங்களின் வாழ்வாதாரத்திற்கே எதிராக மாறி யுள்ளது. 

இப்பகுதி மக்கள் தற்போது குடியி ருக்கும் வீடுகளுக்கு ஊராட்சி நிர்வா கத்திற்கு வரி செலுத்தி வருகின்றனர். ரேசன், வாக்காளர் அடையாள அட்டை  உள்ளது. பல தலைமுறைகளை கடந்து வாழும் எங்கள் அருந்ததியர் மக்களுக்கு இன்னும் பட்டா வழங்கா மல் உள்ளனர். பட்டா இல்லாமல் இருப் பதால் எங்களின் குடியிருப்புகளும் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பஞ்சாயத்து தலைவராக இருந்த எனது ஓட்டு வீடு கூட இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையே உள்ளது. தமிழக அரசும் மாவட்ட நிர்வாகவும் இப்பிரச்சனை யில் உரிய நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கி அரசின் சார்பில் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களை பாதுக்க வேண்டும் என்றார். கொடுத்தவனே பறித்துக்கொள்வதற்கு முன்பு அரசு எங்களுக்கு பட்டா வழங்கி எங்களை பாதுகாக்க வேண்டும் என்றார். இதுகுறித்து பனமரத்துப்பட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா ளர் சுரேஷ் கூறுகையில், பனமரத்துப் பட்டி ஒன்றியத்தில் விவசாயிகள் மற் றும் கிராம பகுதியில் ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் அதிகம் உள்ள னர். அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு செல்வதில்லை. அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள் ளனர். கல்வி, பொருளாதாரம் உள் ளிட்டவைகளில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும் வாழ்க்கை தரம் முன் னேறவில்லை. அரை நூற்றாண்டு  கடந்து வாழும் இமக்களுக்கு இது வரை அரசு பட்டாவும் வழங்கவில்லை, அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. இம்மக்களின் நிலை அறிந்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது, என்றார்.

முன்னதாக நாகமரத்துகாடு கொச வன்குட்டை அருந்ததிய மக்களின் நிலை அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா தலைமையிலான சிபிஎம் தலைவர்கள் நேரில் சென்று அம்மக்களை சந்தித்து நிலைமையை கேட்டறிந்தனர். இதனையடுத்து கொசவன்குட்டை அருந்ததிய மக்க ளின் பட்டா மற்றும் அடிப்படை பிரச்ச னைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி  தொடர்ந்து கோரிக்கையை வென்றெ டுக்கும் வரையில் போராடும் என உறுதியளித்தனர்.  உழைப்பை மட்டுமே மூலதன மாய் கொண்டு வாழ்க்கையை நகர்த் தும் ஏழை, எளிய கொசவன்குட்டை அருந்ததிய உழைப்பாளி மக்களின் நிலை உணர்ந்து சேலம் மாவட்ட நிர் வாகம் முகவரியற்ற நிலையில் உள்ள இம்மக்களுக்கு முகவரியை ஏற்படுத் தித்தர வேண்டும் என்பதே அனை வரது எதிர்பார்ப்பும்...

-எழில், சேலம்

;