districts

img

ஊரக வளர்ச்சித்துறை சங்க அமைப்பு தின கொடியேற்றம்

தருமபுரி, செப்.12- சிஐடியு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க அமைப்பு தினம் திங்களன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத் தின் 35 ஆவது அமைப்பு தின விழா தருமபுரி மாவட்டம் முழு வதும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கொடியேற்று விழா நடைபெற்றது. தருமபுரி சங்க அலுவலகத்தில் மாநில துணைத்தலைவர் ஆர்.ஆறுமுகம் கொடியேற்றி வைத்து  சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் சதீஷ் மாவட்ட செய லாளர் சங்கர், மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன் ஆகி யோர் பேசினர்.  இதேபோன்று தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, மொரப்பூர், அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி, ஏரியூர், பென்னாகரம், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைப்புதின நிகழ்வு நடைபெற்றது.

;