திருப்பூர், நவ.11 இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 45 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று வாலிபர் சங்க வடக்கு ஒன்றிய குழு சார்பில் 15 கிளைகளில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 15 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு, பெருமாநல்லூர் எஸ். எஸ்.நகர் பகுதியில் மாவட்டத் தலைவர் எஸ்.அருள் அமைப் பின் கொடியை ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதையடுத்து, கருக்கன்காட்டுப்புத்தூர், பெருமாநல்லூர், காளிபாளையம், குருவாயூரப்பன் நகர், எஸ்ஆர்வி நகர், பிச் சம்பாளையம், ஸ்ரீநகர், கங்கா நகர், பள்ளிப்பாளையம், அங் கேரிப்பாளையம், ஆத்துப்பாளையம், பரமசிவம்பாளையம், குமரன் காலனி, நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதி கிளைக ளில் திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், வடக்கு ஒன்றியத் தலைவர் ஜி.ரேவந்த், ஒன் றியச் செயலாளர் சந்தோஷ் குமார், பொருளாளர் மனோஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நரேந்திர பிரசாத், தேவராஜ், கதிர், ராஜசேகர், தரணிஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.