districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவிகள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர்

நாமக்கல், செப்.11- ராசிபுரம் அருகே நீச்சல் பழகச்சென்ற போது நீரில் மூழ்கி  உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதிஉதவி வழங்கப்படும் என அறி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கட்ட நாச்சம்பட்டி கிராமம், அத்திப்பழகானூரைச் சேர்ந்த கணே சன் -வெண்ணிலா தம்பதியினரின் மகள் க.ஜனனி (14), கண்ணன் - தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மகள் க.ரச்சனாஸ்ரீ  (15) ஆகிய 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் நத்தம் மான்குட்டையில் நீச்சல் பழகச் சென்றபோது எதிர் பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்துவிட்டனர் என்ற வேத னையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். மகள்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கி றேன். உயிரிழந்த மாணவிகளின் பெற்றோருக்கு தலா ரூபாய் 2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க வும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

உதகை, செப்.11- கூடலூர் அருகே மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி  வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் கூடலூர் ஏரியா  செயலாளர் சி.கே.மணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது, கூடலூர் நகராட்சி, 20 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதி யில் கடந்த ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் பெய்த மழையால் 9 வீடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, அங்கே குடியிருக்கக் கூடாது என்று புவியியல் ஆய்வாளர்களும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கூறி சென்றுவிட்டனர். ஆனால், அரசு அதிகா ரிகள் தற்போது வரை மாற்று இடம் வழங்கவில்லை. இந்நிலை யில், மிகப்பெரிய ஆபத்தான வீட்டில்தான் மேற்படி 9  குடும்பமும் இரவு தங்க வேண்டியுள்ளது. இவர்கள் தங் கும் வீடுகள் எப்போது வேண்டுமானலும் இடியும் நிலையில் உள்ளது. இந்நிலையில், தொடர் கனமழைக்கு வாய்ப்புள்ள தால், மேற்கண்ட குடும்பங்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் செப்.13 ஆம்  தேதியன்று கூடலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெறும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

உதகையில் கலப்பட தேன் அழிப்பு

உதகை, செப்.11- உதகையை அடுத்த பர்லியார் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 8 லிட்டர் கலப்பட தேனை அதிகாரிகள் அழித்தனர். நீலகிரி மாவட்டம், உதகைக்கு வரும் சுற் றுலா பயணிகளுக்கு குன்னூர், பர்லியார், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தேன் விற் பனை செய்யப்பட்டு வருகிறது. சிலர் இரு சக்கர வாகனத்தில் தேன்கூட்டுடன் கொண்டு  வந்து விற்பனை செய்து வருகின்றனர். அதில் கலப்பட தேன் விற்பனை செய்வதால், அதனை வாங்கி செல்லும் சுற்றுலா பயணிகள் பல் வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகினர். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் பர்லியார் பகுதியில் உணவு பாது காப்பு அலுவலர்கள் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது சாலையோ ரத்தில் இருசக்கர வாகனத்தில் 2 பேர் கலப்பட தேன் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 8 லிட்டர் கலப்பட தேன், கீழே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும், கலப் பட தேன் விற்றால் கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மனைவியின் தங்கையை கடத்திய காவல் உதவி ஆய்வாளர் பணிநீக்கம்

உதகை, செப்.11- மனைவியின் தங்கையை கடத்திய வழக்கு சம்பந்தமாக கூடலூர் காவல் உதவி ஆய்வாளரை பணிநீக்கம் செய்து கோவை சரக காவல் துறை துணைத்தலைவர் முத்து சாமி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் பகு தியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (42).  இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கோபி மது விலக்கு துறையில் காவல் உதவி ஆய்வா ளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், மனைவியின் தங்கையை திருமணம் முடிக்க பல்வேறு வகையில் திட்டமிட்டுள்ளார். இதன் படி 2018 ஆம் ஆண்டு பி.எட் படித்து வந்த  மனைவியின் தங்கையிடம் மதுரையில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி யுள்ளார். இதைத்தொடர்ந்து வெங்கடாசலம் தனது மனைவி மற்றும் மனைவியின் தங்கை யுடன் ஈரோட்டில் இருந்து மதுரைக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது மதுரைக்கு முன்னால் காவல் சோதனைச்சாவடியில் தனது மனைவியை இறக்கி விட்டு, மனைவியின் தங்கையை மட்டும் கடத்திக்கொண்டு மதுரைக்கு சென் றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவ ரது மனைவி இதுகுறித்து சோதனைச்சாவ டியில் இருந்த காவலர்களிடம் தெரிவித் தார். தொடர்ந்து அந்தியூர் காவல் நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து நெடுஞ்சாலைத்துறை போலீசாரின் உதவியுடன் வெங்கடாசலத்தை மதுரைக்கு செல்லும் வழியில் மடக்கி பிடித்தனர். இதை யடுத்து அந்தியூர் காவல் ஆய்வாளர் ரவி  தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண் டனர். இதில் வெங்கடாசலம் மனைவியின் தங் கையை கடத்தி சென்றது உறுதியானது. தொடர்ந்து கடத்தல் வழக்குப்பதிவு செய்து  வெங்கடாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த வெங்கடாசலம் மீண்டும் பணியில் சேர்ந்தார். இதன்பின் கொரோனா காலகட்டத்தில் அவர் நீலகிரி மாவட்டம், கூட லூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், கடத்தல் வழக்கு சம்பந்தமாக வெங்கடாசலத்தை பணி நீக்கம் செய்து கோவை சரக காவல் துறை  துணைத்தலைவர் முத்துசாமி உத்தரவு பிறப் பித்துள்ளார்.

கோடந்தூர் செட்டில்மெண்டில் ஆட்சியர் ஆய்வு

திருப்பூர், செப். 11 -  உடுமலைப்பேட்டை வட்டம் மானுப்பட்டி கிராமம் கோடந்தூர் ஆட்டுமலை, பொறுப்பாறு ஆகிய செட்டில் மென்ட் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் ஆய்வு மேற்கொண்டு ஆட்டுமலை பழங்குடியினர் குடியிருப்பில் மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். பழங்குடியின மக்களுக்கு சாதி சான்று, குடும்ப அட்டை  இல்லாத நபர்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை  எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்தார். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன்,  மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரவிச்சந்திரன், உதவி  வன பாதுகாவலர் கணேஸ்ராம், வட்டாட்சியர் கண்ணா மணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண் டனர்.

அரசுப்பள்ளி மாணவர்கள்  263 பேர்  நீட் தேர்வில் தேர்ச்சி

தருமபுரி, செப்.11- தருமபுரி மாவட்ட அரசுப்பள்ளிகளிலிருந்து  நீட் தேர்வு  எழுதிய 263 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தருமபுரி மாவட்டம் முழுவதும் 107 அரசு மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களில் ஆயிரத்து  468 மாணவ, மாணவியர் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப் பித்தனர். இந்த அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கல் வித்துறை மூலம் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட் டது. மேலும், தேர்வுகளும் நடத்தப்பட்டு மாணவர்களின் திறன் பரிசோதிக்கப்பட்டு, அதற்கேற்ப கூடுதல் பயிற்சிகளும் அளிக் கப்பட்டன. நீட் தேர்வுக்கு 1,468 மாணவ, மாணவியர் தயாராகி வந்த நிலையில், தேர்வு நாளன்று 1,213 மாணவ, மாணவியர்  மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.  தருமபுரி மாவட்டத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவ, மாணவியரில் 263 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். பண்டஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் விஷ்ணு குமார் 376 மதிப்பெண்கள் பெற்று, தருமபுரி மாவட்டத்தில் நீட்  தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித் துள்ளார். அதேபோல, களப்பம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கவின் 369 மதிப்பெண்களுடன் 2 ஆம் இடமும்,  பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சரண் 363 மதிப்பெண்கள் பெற்று 3 ஆம் இடமும் பிடித்தனர். கடந்த ஆண் டில் தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 262 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் 36 பேர் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தனர். நடப்பு ஆண்டில் 263 பேர்  தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தருமபுரி  மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்களில் 66 பேருக்கு, அரசுப் பள்ளிகளுக்கான 7.5 சதவிகித சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இளநிலை பொது  மருத்துவம் மற்றும் பல் மருத்துவப்படிப்புகளில் சேர்க்கை  கிடைக்கும் என  முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தெரிவித்தார். மேலும், இதற்காக பாடுபட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக வும், வரும் கல்வியாண்டில் இதே ஒத்துழைப்பை நல்க வேண் டும் எனவும் கேட்டுக்கொள்வதாக குணசேகரன் தெரிவித் தார்.

கோவை - போத்தனூர் இடையே 37 நாட்களுக்கு ரயில் சேவைகள் மாற்றம்

கோவை, செப்.11- கோவை - போத்தனூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 37 நாட்களுக்கு ரயில் சேவைகளில் மாற் றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை - போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத னால் சொர்ணூரில் இருந்து தினமும் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு, காலை 11.05 மணிக்கு கோவை வரும் ரயில் (எண்:06458), வரும் செப்.12 ஆம் தேதி (இன்று) முதல் அக்.18  ஆம் தேதி வரை போத்தனூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், கோவையிலிருந்து தினமும் மாலை  4.30 மணிக்கு சொர்ணூர் புறப்பட்டுச் செல்லும் தினசரி ரயில்  (எண்:06459), கோவைக்கு பதில் போத்தனூரிலிருந்து செப்.12  ஆம் தேதி (இன்று) முதல் அக்.18 ஆம் தேதி வரை மாலை 4.41 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். பிலாஸ்பூரிலிருந்து வரும் செப்.12,19,26 மற்றும் அக்.3,10,17 ஆகிய தேதிகளில் புறப்பட்டு, கோவை வழி யாக எர்ணாகுளம் செல்லும் வாராந்திர விரைவு ரயில் (எண்:22815), கோவைக்கு பதில் இருகூர் – போத்தனூர் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். நெல்லையிலிருந்து வரும் செப்.14,21,28 மற்றும் அக்.5,12 ஆகிய தேதிகளில் புறப்பட்டு கோவை வழியாக தாதர் செல்லும் வாராந்திர விரைவு ரயில் (எண்:22630), கோவைக்கு பதில் இருகூர் - போத்தனூர் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். பிலாஸ்பூரில் இருந்து வரும்  செப்.13,20,27 மற்றும் அக்.4,11,18 ஆகிய தேதிகளில் புறப் பட்டு, கோவை வழியாக நெல்லை செல்லும் வாராந்திர விரைவு ரயில் (22619), இருகூர் - போத்தனூர் மாற்று வழித் தடத்தில் இயக்கப்படும். பாட்னாவிலிருந்து வரும் செப்.13,20,27 மற்றும் அக்.4,11,18 ஆகிய தேதிகளில் புறப்பட்டு கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் வாராந்திர விரைவு ரயில் (எண்:22670), இருகூர் - போத்தனூர் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். செகந்திராபாத்திலிருந்து வரும் செப்.16,23,30 மற்றும் அக்.7,14 ஆகிய தேதிகளில் புறப்பட்டு கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் வாராந்திர விரைவு ரயில் (எண்:07189), கோவைக்கு பதில் இருகூர் - போத்தனூர் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். கோவை வழியாக இந்த ரயில்கள் இயக்கப்படாததால், போத்தனூரில் இந்த ரயில்கள் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

கோவை, செப்.11- கோவை மாநகராட் சிக்கு சிறுவாணி, பில்லூர், ஆழியார் போன்ற கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் குடி நீர் பெறப்பட்டு விநியோகிக் கப்படுகிறது. இதுபோன்ற பெறப்படும் குடிநீர் மாநக ராட்சிக்குட்பட்ட குடிநீர் நீர்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இந் நிலையில், டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க குடிநீர் நீர்தேக்க தொட்டிகளில் குளோ ரின் மருந்து மாநராட்சி ஊழி யர்களால் கலக்கப்படுகி றது.

;