districts

img

காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணி விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 6 - பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தில் முக்கியமாக தண்ணீரைக் கொண்டு வரும் காண்டூர் கால்வாய் சீரமைப்பு  பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை விரைந்து முடித்து தண்ணீர் இருப்பு அளவை பொறுத்து ஆகஸ்ட் மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவ சாயிகள் கோரியுள்ளனர். பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் திருப்பூர்  மற்றும் கோவை மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் விவசாய  பாசனம் நடைபெற்று வருகிறது. அத்துடன் கிராமப்புற, நகர்ப் புறங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்களின் குடிநீருக்கும் ஆதா ரமாக உள்ளது. இதில் பாசனத்திற்கு நீர் திறந்து விடக் கூடிய  திருமூர்த்தி அணைக்கு மலைக் குன்றுகளுக்கு இடையே கட் டப்பட்டிருக்கும் சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட தொகுப்பு அணைகளில் இருந்து தண்ணீரைக் கொண்டுவந்து  சேர்க்கும் காண்டூர் கால்வாய் உள்ளது. இந்த காண்டூர் கால் வாயில் சீரமைப்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகி றது. இப்பணிகளை விரைந்து முடித்து, நீர் வரத்து மற்றும்  இருப்பைப் பொறுத்து ஆகஸ்டு மாதத்தில் தண்ணீர் திறக்க  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பி.ஏ.பி. பாசன சங்கங்கள் மற்றும் விவசாயிகள் சார்பாக நீர்வளத் துறை அதிகாரிகளிடமும், அரசிடமும் வலியுறுத்தி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.