districts

img

கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம்

திருப்பூர், அக். 18 - பசும்பால், எருமைப்பாலுக்கு கொள் முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி  பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில்  கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தி னர் செவ்வாயன்று திருப்பூர் மாவட்டம், ஊத் துக்குளி வட்டம், சேடர்பாளையம் பால் உற் பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக  மாநிலந்தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதி யாக, கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். கால்நடை தீவனங்களான தவிடு, பருத் திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனம்  ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. சோளத்தட்டை உள்ளிட்ட தீவ னம் உற்பத்தி செலவுகள் அதிகரித்து விட்டது.  எனினும் 2019 ஆம் ஆண்டுக்குப்பின் பால் கொள்முதல் விலையை தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் உயர்த்தி தரவில்லை. எனவே விவசாயிகள் கூட்டுறவு சங்கத்துக்கு கொண்டு வரும் பால் கொள்முதல்  விலையை லிட்டர் ஒன்றுக்கு பத்து ரூபாய்  உயர்த்தி வழங்கவும், பால் பண பாக்கி களை உடனடியாக வழங்கவும், கலப்பு  தீவனத்திற்கு மானிய விலை வழங்கவும் வலியுறுத்தி இப்போராட்டம் நடத்தப்பட்டது.   இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு பால்  உற்பத்தியாளர் சங்கத்தின் ஊத்துக்குளி தாலுகா தலைவர் எஸ்.கே.பழனிசாமி தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் மணி என்கிற சுப்பிரமணி முன்னிலை வகித் தார். கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர். குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க  மாவட்ட தலைவர் எஸ்.கே.கொளந்தசாமி  ஆகியோர் உரையாற்றினர்.  இப்போராட்டத்தில் விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு தலைவர் கே.ரங்கசாமி, ஊத்துக்குளி தாலுகா துணைத்தலைவர் எஸ்.கோபாலகிருஷ்ணன், பொருளாளர் இரா.ரவி உட்பட சேடர்பாளையம் பால் உற் பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கறவை மாடுகளுடன் கலந்து  கொண்டனர். மேலும் பாலை சாலையில் கொட்டி, பால் கொள்முதல் விலையை உடனே ஏற்றி தர வேண்டும் என்று கோபா வேசத்துடன் முழக்கம் எழுப்பினர்.