districts

மின் இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

உடுமலை, டிச.3-  மின்சார வாரியத்தின் மூலம் விவசாய பயன்பாட்டிற்கு மின் இணைப்பு வழங்கப்படும் போது, ஏற்கனவே மின் இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின்  இணைப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறித்துள் ளது. இதன்படி விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கோரி மனு தாக்கல் செய்து வரும் நிலை யில், மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளின் நிலையை அறியாமல் அனைத்து தரப்பு விவசாயிகளிடம் இருந்து மனு பெற்று மின் இணைப்பு வழங்கி வருகிறார்கள். இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், மின் வாரியத்தின் சார்பில் ஒரு குறிப்பிட்ட நில அளவின் அடிப் படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத னால் பணம் உள்ள விவசாயிகளுக்கு ஒன்றுக்கும் மேற் பட்ட மின் இணைப்புகள் கிடைக்கிறது. மேலும், தட்கல் திட் டத்தில் பணம் செலுத்தியும் மின் இணைப்பை பெரு கின்றனர். ஆனால் இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப் பம் கொடுத்துள்ள ஏழை விவசாயிகளுக்கு மின்வாரியம் இது வரை மின் இணைப்பு தரவில்லை என தெரிவித்தனர். மேலும், மின்வாரியத்தின் மூலம் விவசாயிகளுக்கு மின்  இணைப்பு வழங்கும்போது, ஏற்கனவே மின் இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண் டும். சிறு குறு விவசாயிகளுக்கு சுய நிதி திட்டத்தின் கீழ்  மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள்  கோரிக்கை வைத்துள்ளனர்.