districts

img

உடுமலைப்பேட்டை அரசுப் பேருந்து எப்.சி., பணிமனை மூடல்: தொழிலாளர்கள் குமுறல்

திருப்பூர், மே 31 – உடுமலைப்பேட்டையில் செயல் பட்டு வந்த, அரசுப் பேருந்துகளை தகுதிச் சான்றுக்கு (எப்சி) சீரமைக் கும் பணிமனை கடந்த 25ஆம் தேதி மூடப்பட்டது. இதில் வேலை செய்த 15 தொழிலாளர்கள் வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையின் ஒரு  பகுதியாக இந்த பணிமனை மூடப்பட் டதாக தொழிலாளர்கள் மனக்குமுற லுடன் குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாடு அரசுப் போக்குவ ரத்துக் கழகத்தில் பல்வேறு ஊர்க ளில் பேருந்து பணிமனைகள் செயல் பட்டு வருகின்றன. அதேபோல் புதிய  பேருந்துகள் வாங்கும்போது அவற் றின் முழு கட்டமைப்பை (பாடி) கட் டும் பணிமனைகளாகவும் செயல் பட்டு வந்தன. அதில் ஒன்றாக உடு மலை பேருந்து பணிமனை சிறப்பு டன் செயல்பட்டு வந்தது. காலப்போக்கில் அரசு பேருந்து களைக் கொள்முதல் செய்யும்போது தனியார் நிறுவனங்களில் பேருந்து பாடி கட்டும் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்கியது. இதனால் அரசு பாடி கட்டும் பணிம னைகளில் வேலை பாதிக்கப்பட் டது. திருப்பூர் உடுமலைபேட்டை பணிமனையில் பாடி கட்டும் வேலை  நடைபெறாத நிலையில், தகுதிச்சான் றுக்கு பேருந்துகளை சீரமைக்கும் பணி மேற்கொள்ளும் இடமாக அதை  மாற்றி பயன்படுத்தி வந்தனர். இங்கு  15 பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் உடுமலை பணிம னையையும் மூடும் முடிவுக்கு நி்ர்வா கம் வந்தது. இங்கு வேலை செய்யும்  தொழிலாளர்கள் 15 பேரை தாராபு ரம் உள்ளிட்ட வேறு ஊர்களுக்கு இட  மாற்றுதல் செய்தது. இங்கு வேலை  செய்யும் தொழிலாளர்கள் ஆட் சேபம் தெரிவித்தபோதும் அதை பொருட்படுத்தாமல் பேருந்து எப்சி  பணிமனையை கடந்த 25ஆம் தேதி  தானடித்த மூப்பாக நிர்வாகம் மூடி விட்டது என்று தொழிலாளர்கள் தெரி வித்தனர். அரசுப் போக்குவரத்துக் கழகத் தில் நிர்வாக சீர்கேடு இருக்கும் நிலை யிலும், உதிரிபாகங்கள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்வதாலும் அரசுப் போக்கு வரத்துக் கழகம் படிப்படியாக சீர்கு லைக்கப்பட்டு வருகிறது. ஏற்கெ னவே இங்கு புதிய பேருந்து பாடி கட் டும் பணி சிறப்பாக செயல்பட்டு வந் தது. அதை கைவிட்டதால் இந்த பணி மனை எப்சி பணிமனையாக மாற்றப் பட்டது. இப்போது இதையும் நிர்வா கம் மூடிவிட்டது. மொத்தத்தில் அர சுப் போக்குவரத்துக் கழகம் இங்கு  வேலை செய்யும் தொழிலாளர்க ளால் சீர்குலைக்கப்படுவதில்லை. அதிகார வர்க்கத்தால் திட்டமிட்டு சீர் குலைக்கப்படுகிறது என்று தொழிலா ளர்கள் குற்றம் சாட்டினர்.