கோவை, செப்.12- உக்கடம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த நிலையில் அங் கிருந்த மக்களுக்கு வீடு வழங்குகிறோம் என வாக்குறுதியளித்து 10 ஆண்டுகள் கடந்தும் இதுவரை வீடுகளை ஒதுக்கித்தராததால் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் அப்பகுதி மக்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி கோவை உக்கடம் வின்சென்ட் சாலை யில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 13 பேர் இறந்த னர். மேலும், 24 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அதே இடத்தில் வீடுகள் கட்டித்தர அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு 352 குடும்பத்திற்கு மட்டும் வீடுகள் வழங்கப்பட்டன.
மீதமுள்ள கட்டிடத்தை சுற்றியிருந்த ஏழை,எளிய உழைப்பாளி மக்களுக்கு வீடுகள் வழங்கப் படவில்லை. இதனையடுத்து மாவட்ட நிர் வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத் ததையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தர வின் பேரில் பாதிக்கப்படும் குடும்பத்தினர் எத்தனை பேர், வீடுகள் தேவைப்படுபவர் எத் தனை பேர் உள்ளிட்டவைகளை தெற்கு வட் டாட்சியர் ஆய்வு செய்தனர். இதன்பேரில் அறிக்கையையும் இறுதி செய்தனர். 2020 ஆம் ஆண்டு அறிக்கையை அளித்தபிறகும், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இதுவரை வீடுகள் ஒதுக்கி தரவில்லை. அதில், எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனை யடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலை மையில், பாதிக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக் கைக்கான தீர்வை அளிக்க வேண்டும், என் றனர். இந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்த தெற்கு வட்டாட்சியர் இறுதி செய் யப்பட்ட அறிக்கையை ஓரிரு நாளில் கோட் டாட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து உரிய தீர்வை பெற்றுத்தருவதாக திரண்டிருந்த மக் களிடம் உறுதியளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதில், கீரின்கார்டன் மற்றும் ரெயின்போ கார்டன் மக்களுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு நகர செயலாளர் பி.சி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.ஜாகீர் ஆகியோர் உடனி ருந்தனர்.