districts

img

சாலை அமைக்க தானமாக வழங்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு

தருமபுரி, ஜூலை 7- நல்லம்பள்ளி அருகே சாலை  அமைக்க விவசாயிகள் தானமாக வழங்கப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதை மீட்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தர்ணா வில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி அருகே உள்ள சாமிசெட்டிப் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கமல நத்தம் கிராமத்தில் ஏராளமான ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. அப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்யும் வெண்டை, தக்காளி, கத்திரிக்காய் உள்ளிட்டவற்றை வாகனங்களில் கொண்டு செல்ல ஏதுவாக விவ சாய நிலத்துக்கு இடையே சாலை  அமைக்க, கடந்த 3 ஆண்டுகளுக்கு  முன்பு நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து நிலத்தை அப்பகுதி விவசா யிகள் தானமாக வழங்கினர். ஆனால், இதுவரை சம்பந்தப்பட்ட துறையைச்  சேர்ந்த அலுவலர்கள், சாலைக்காக தானமாக வழங்கிய நிலத்தை அள வீடு செய்து, பணியை துவங்காமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகி றது. மேலும், அப்பகுதியை சேர்ந்த சிலர் தானமாக வழங்கிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவதாக தெரிகிறது. இதையொட்டி நிலத்தை மீட்டு, சாலை அமைக்ககோரி சம் பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப் பகுதி விவசாயிகள். தானமாக வழங் கிய நிலத்தில் சாலை அமைக்க வலியு றுத்தி நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். சுமார் ஒரு மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின், கோரிக்கை குறித்து விரைவில் நடவடிக்கை எடுப் பதுடன், தானமாக வழங்கிய நிலத்தை அளவீடு செய்து சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளிக்கப்பட்டது. இதனால் சமாதானம டைந்த விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.