districts

img

ஊதிய ஒப்பந்த பலன்களை வழங்கிடுக

ஈரோடு, செப்.13- ஊதிய ஒப்பந்த பலன்களை ஓய் வூதியர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப் பின் ஈரோடு மண்டல 5 ஆவது மாநாடு ஈரோடு மாநகராட்சி திருமண மண்ட பத்தில் மாவட்ட தலைவர் பி.ஜெக நாதன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து ஓய்வூ தியர் நல அமைப்பின் பொதுச்செய லாளர் கே.கர்சன் உரையாற்றினார். ஓய்வூதியர் நல அமைப்பின் துணை பொதுச்செயலாளர் பி.சதாசிவம் சிறப் புரையாற்றினார். இதில் மத்திய, மாநில அரசு ஓய்வூதியர் ஒருங்கி ணைப்புக்குழுவின் ஈரோடு மாவட்ட செயலாளர் என்.ராமசாமி, தமிழக அரசு அனைத்துத்துறை கூட்டமைப் பின் செயலாளர் வி.பன்னீர்செல் வம், சிஐடியு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க பொதுச்செய லாளர் டி.ஜான்சன் கென்னடி ஆகி யோர் வாழ்த்துரையாற்றினார். இதில், போக்குவரத்து ஓய்வூதி யர்களுக்கு நிறுத்தப்பட்ட சேம நல நிதியை உடனடியாக வழங்க வேண் டும். அகவிலைப்படி அரியருடன், ஓய் வூதியத்தில் அகவிலைப்படி உயர்வை சேர்க்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பலன்களை ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும். பணியில் மரண மடைந்த தொழிலாளியின் வாரிசுக ளுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து ஓய்வுபெற் றோர் நல அமைப்பின் மண்டல தலை வராக பி.ஜெகநாதன், செயலாள ராக எஸ்.ஜெயராமன், பொருளாள ராக ஆர்.நாச்சிமுத்து உட்பட 20  பேர் கொண்ட நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

;