districts

img

நகர கூட்டுறவு வங்கிகளை பலப்படுத்த வலியுறுத்தல்

சேலம், ஜூலை 10- நகர கூட்டுறவு வங்கிகளை, மாவட்ட அளவில் இணைத்து பலப்படுத்த வேண் டும் என சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு வங்கி பணியா ளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சேலம், நாமக்கல் மாவட்ட நகர கூட் டுறவு வங்கி பணியாளர்கள் சங்க 8  ஆவது மாநாடு, சேலம் விபி சிந்தன் நினைவகத்தில், மாவட்ட தலைவர் கே.சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. துணை பொதுச்செய லாளர் எஸ்.ராமமூர்த்தி வரவேற்றார். பொதுச்செயலாளர் இ.சர்வேசன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற் றினார். செயலாளர் ஜே.பாலு, மாவட்ட பொருளாளர் எஸ்.அங்குராஜ் ஆகி யோர் அறிக்கைகளை முன்வைத்தனர். இந்திய வங்கி ஊழியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் எஸ்.ஏ.ராஜேந்திரன் மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.தீன தயாளன் ஆகியோர் வாழ்த்துரையாற் றினர். இம்மாநாட்டில், தமிழ்நாட்டிலுள்ள தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உரு வாக்க வேண்டும். நகர கூட்டுறவு வங்கி களை மாவட்ட அளவில் இணைத்து பலப்படுத்த வேண்டும். கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதி யமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, “சேலம், நாமக் கல், ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சங்கத் தின் தலைவராக சிவசுப்பிரமணியம், செயலாளராக ராமமூர்த்தி, பொருளா ளராக அங்குராஜ் மற்றும் 12 நிர்வாகி கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் உள் ளிட்ட 27 பேர் கொண்ட குழு உருவாக் கப்பட்டது. கனரா வங்கி சங்க தலை வர் தமிழரசு மாநாட்டை நிறைவு செய்து  உரையாற்றினார். மாநாட்டில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக் கப்பட்டது.

;