தருமபுரி நவ-12, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல்-2023 சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நவ-12, நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கி.சாந்தி, தருமபுரி நகராட்சி 4 ஆவது வார்டிற் குட்பட்ட சாலை விநாயகர் கோயில் ரோடு, நகராட்சி நடுநி லைப்பள்ளி, தருமபுரி வட்டம், அதகபாடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்காளர் பட்டி யல்-2023 சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நடைபெறுகின்ற வாக்காளர் பட்டியல் 2023 சிறப்பு சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்களை பயன்படுத் திக்கொண்டு, இம்முகாம்களில் 01.01.2023 -ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர் கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் இதுவரை தங்களது பெயரினை சேர்க்காத வர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர் கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கு தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவை களை உரிய படிவங்களில் விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு இணைத்து விண்ணபிக்கலாம் அல்லது இணையதளம் மூலமாகவும் விண்ணபிக்கலாம் என தெரிவித் துள்ளார். இந்தஆய்வின்போது தருமபுரி வருவாய்க் கோட்டாட் சியர் (பொ) ஜெ.ஜெயக்குமார், தருமபுரி வருவாய் வட்டாட் சியர் .தன.ராஜராஜன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனி ருந்தனர்.