உதகை, செப்.26- பந்தலூர் அருகே யானை தாக்கி முதியவர் உயிரிழந் ததால், மனித விலங்கு மோதலுக்கு தீர்வு வேண்டி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர், சேரம்பாடி அடுத்து சப்பந் தோடு கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்தவர் முக மது(54). இவரது வீட்டுக்கு பின்புறம் பாக்கு தோட்டம் உள் ளது. இங்கு ஏராளமான பாக்குமரங்களை வளர்த்து பராம ரித்து வந்துள்ளார். இந்நிலையில், வியாழனன்று அதிகாலை வனத்தை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள், முகமதுவின் பாக்கு தோட்டத் துக்குள் புகுந்தது. அங்கு பயிரிடப்பட்டிருந்த பாக்கு மரங் களை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியது. வெளியில் ஏதோ சத்தம் வருவதை கேட்டதும், முகமது வீட்டுக்கு வெளி யில் வந்து டார்ச்லைட் அடித்து என்னவென்று பார்த்தார். அப் போது தோட்டத்துக்குள் 2 காட்டு யானைகள் நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் வீட்டிற்குள் செல்ல முயன் றார். அதற்குள் அங்கு நின்றிருந்த 2 காட்டு யானைகளில் ஒன்று முகமதுவை நோக்கி விரட்டி வந்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற் றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து முகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால், முகமதுவின் உறவினர்கள் அவரது உடலை எடுக்க விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். வனவிலங்குகளிடம் இருந்து நிரந்தர தீர்வு வேண்டும் என கூறி போராட்டத் தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வனத்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் யானைகளி டம் இருந்து பாதுகாப்பு கோரியும், இங்கு சுற்றி திரியும் யானை களை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என வலி யுறுத்தியும் சேரம்பாடி சுங்கம் பகுதியில் உடலை எடுக்க விடா மல் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, கூடலூர் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். யானைகளை வனத்துக்குள் விரட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால், தமிழக-கேரள எல்லையின் முக்கிய சாலையாக கருதப்படும் இச்சாலை யில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.