கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலக உருண்டை, அதன் அருகில் உள்ள புத்தகங்களை படிக்க சிறுமி ஒருவர் படியேறி செல்வது போன்ற சிலை அமைக்கப்பட்டிருந்தது. இதில், சிறுமியின் சிலையை மனநலம் பாதித்த ஒருவர் உடைத்து வீசியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.