தருமபுரி, அக்.15- தீபாவளி போனஸ் 10 சதம் என தன்னிச்சையாக அறிவித்த தமிழக அரசை கண்டித்தும், தொழிற் சங்கத்தை அழைத்து பேசி மின் வாரிய தொழிலாளர்களுக்கு 25 சதவிகித போனஸ் வழங்ககோரி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் பரவ லாக ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது. தமிழக அரசு பொதுத்துறை நிறு வனங்களில் பணியாற்றும் ஊழியர் களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனஸாக 10 சதவிகித வழங்கப் படுவதாக தமிழக அரசு அறிவித் துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் போனஸ் அறிவிப்பை வெளியிட்டதை போலவே திமுக அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவித்துள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே தொழிற்சங்கங்களை அழைத்து பேசி போனஸ் அறிவிக்கும் நடை முறையை தொடர வேண்டும்.
25 சதவிகித போனசை மின் வாரிய பணியாளர்கள், பொறி யாளர்கள்,அலுவலர்கள் பகுதி நேரபணியாளர்கள் அனைவ ருக்கும் வழங்கிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் விடுபட்டுள்ள பகுதி நேர ஊழியர்கள் ஆகியோர் களை அடையாளம் கண்டு அவர் களுக்கும் கருணை தொகை வழங்க வேண்டும். என வலியுறுத் தினர். தருமபுரி மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு திட்ட இணைச்செயலாளர் கே.ஜெகநாதன் தலைமை தாங்கி னார். மாநில துணைத்தலைவர் பி. ஜிவா, மாவட்ட செயலாளர் டி. லெனின் மகேந்திரன், பொருளாளர் வி.சீனிவாசன் ,துணைத்தலைவர் எம்.ஜெயக்குமார், இணைச் செயலாளர் எம்.காளியப்பன், ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். துணைத்தலைவர் எம்.ஆறுமுகம் நன்றி கூறினார். கோவை இதேபோன்று கோவை தலைமை பொறியாளர் அலுவலக (டாடாபாத்) நுழைவுவாயில் முன்பு மாபெரும் கண்டன ஒலி முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை மாநகர கிளை தலைவர் மதுசூதனன் தலைமை தாங் கினார். இதில், கூட்டமைப்பினர் திர ளானோர் பங்கேற்றனர்.