districts

img

கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்: மக்கள் அவதி

கோபி, மே 13- கோபி அருகே பலத்த காற்றுடன் பெய்த  கனமழையால் மழைநீருடன் கழிவுநீர் வீடுக ளுக்குள் புகுந்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளை யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. கடந்த  சில தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று  குறைந்து காணப்பட்டு. அவ்வப்போது வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந் தது. இந்நிலையில், திங்களன்று ஆறு மாவட் டங்களில் வானிலை கீழடுக்கு காற்றின் திசை  வேகம் மாறுபடுவதால் மழைக்கான அறி விப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், கோபி செட்டிபாளையத்தில் சுமார் ஒரு மணி நேரம்  பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.  இதனால் கீரிப்பள்ளம் ஓடையில் சாக்கடை  கழிவுநீருடன் மழை வெள்ளம் கலந்து பெருக் கெடுத்து ஓடியது. இதில், மேட்டுவலவு பகு தியில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய நீரேற்று  நிலையம் பணிகள் நடைபெற்று வருவதால்,  பணிகளுக்காக சாக்கடை கழிவுநீர் செல்ல  குழாய்கள் பதித்து ஓடையில் வெளியேற்றப் பட்டு வந்தன. கனமழையால் அந்த குழாய்க ளில் அடைப்பு ஏற்பட்டு, வீராசாமிபிள்ளை வீதியில் சாக்கடை கழிவுநீருடன் மழை வெள் ளம் பெருக்கெடுத்து, 5க்கும் மேற்பட்ட வீடு களுக்குள் புகுந்தது. இதனால் கழிவுநீரின் துர் நாற்றம் தாங்க முடியாமல் அவதிபட்டு வரு வதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் களால் பாதிக்கப்படும் நிலை உள்ளதென வும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ள னர். இதுபோன்று இன்னல்களை தவிர்க்க  கோபி நகராட்சி நிர்வாகம் தடுப்புசுவர் அமைத்து கொடுக்க வேண்டி பல ஆண்டு களாக கோரிக்கை விடுத்தும் எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற் றஞ்சாட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து கழி வுநீரை அகற்ற ஒப்பந்த பணியாளர்கள் இயந்தி ரம் மூலம் ஓடையில் ஏற்பட்டிருந்த அடைப்பு களை அப்புறப்படுத்தினர். பள்ளிபாளையத்தில் பலத்த மழை நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங் களன்று காலை முதலே வானம் மேகமூட் டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில்  பலத்த காற்றுடன் கனமழை பெய்ய துவங்கி யது. பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலை, குமாரபாளையம் சாலை, தனியார் காகித ஆலை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. திடீர் மழை யின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. நக ரின் பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வா யில் மழைநீர் நிரம்பி, சாலை முழுவதும் மழை  நீர் தேங்கி நின்றது. நகரின் பல்வேறு இடங்க ளில் சாலையோரங்களில் இருந்த சிறிய அள விலான மரங்கள் மற்றும் மரக்கிளைகள் நடு  சாலையில் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயணைப்புத்துறை வீரர் கள் உடைந்த மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

;