districts

img

சாலையின் நடுவே குடிநீர்க் குழாய் உடைப்பு கண்டுகொள்ளாத மாநகராட்சி - வாகன ஓட்டிகள் அவதி

கோவை, டிச.11– கோவை சிங்காநல்லூர் சிக்னலின் மத்தியில் குடிநீர்க் குழாய் உடைப்பு ஏற்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். கோவை - திருச்சி சாலையில் அமைந்துள்ள சிங்கா நல்லூர் பகுதியானது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். வெள்ளலூர் – சிங்கை, அவிநாசி சாலை – சிங்கை, திருச்சி மற்றும் உக்கடம் சாலைகள் இணையும் ஒரே பிரதான சாலையாக உள்ளது. இந்நிலையில், நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல் லும் இப்பகுதியில், கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக சிக்னலுக்கு நடுவே குடிநீர்க் குழாய் உடைப்பு ஏற்பட்டுள் ளது.

நெரிசல்களுக்கு நடுவே இந்த உடைப்பு ஏற்பட்டுள்ள தால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமமடைந்து வருகின்ற னர். இதேபோல் குடிநீரின் அளவு குறைவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக சம்மந்தப் பட்ட அதிகாரிகளிடம் புகைப்படங்களுடன் தெரிவித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதனை உடனடியாக சரிசெய்ய மாநகராட்சி சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;