உடுமலை, பிப்.22 - நீலகிரி வரையாட்டின் முக்கியத்து வம் மற்றும் பாதுகாப்பு குறித்து திரு நெல்வேலி அரும்புகள் அறக்கட்டளை உடன் வனத்துறை இணைந்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நீலகிரி வரையாடு குறித்து ஏற்கெ னவே தென்காசி, திருநெல்வேலி, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கோவை மாவட் டத்தில் பிப்.18 முதல் நீலகிரி வரையாடு விழிப்புணர்வு பிரச்சார வாகன நிகழ்ச்சி கோயம்புத்தூரில் டிஎன்எப்ஏ வளாகத் தில் நடத்தப்பட்டது. தமிழ்நாடு வன உயர் பயிற்சியகம் முதல்வர் மற்றும் இயக்குநர் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மேலும், கோவை, பொள் ளாச்சி மற்றும் திருப்பூர் பகுதிகளில் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நீலகிரி வரையாடு விழிப்பு ணர்வு வாகன பிரச்சார நிகழ்ச்சி சனி யன்று உடுமலைப்பேட்டையில் பள்ளி கல்லூரி மாணவர்களிடமும், கல்லாபு ரம், உத்திராபாளையம், கொழுமம் உள் ளிட்ட கிராம பொது இடங்களில் நடத்தப் பட்டது. இதில் நீலகிரி வரையாடு திட்டம் பற்றியும், நீலகிரி வரையாட்டின் பாது காப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது குறித்து நீலகிரி வரையாடு திட்டத்தின் உதவி இயக்குநர் கே. கணேஷ்ராம் கூறுகையில், அமராவதி அணைக்கு கொடைக்கானல் மலை மற்றும் மஞ்சப்பட்டி வனப்பகுதியிலி ருந்து வரும் தேனாரு, கேரள வனப்பகு தியிலிருந்து வரும் பாம்பாறு மற்றும் வால்பாறை புல்மலைப் பகுதிகளிலி ருந்து வரும் சின்னார் ஆறு போன்ற ஆறு கள் முக்கிய நீர் வரத்துகளாகும். இதில் சின்னார் ஆறு ஆண்டு முழுவதும் நீர்வ ரத்துடன் காணப்படுகிறது. இந்த ஆறு வால்பாறை வனச்சரகம் புல்மலைச் சுற் றுகளில் உற்பத்தியாகின்றது. இந்த புல் மலைகளில் வரையாடுகள் வாழ்ந்து வருவதன் காரணமாக அமராவதி அணைக்கு ஆண்டு முழுவதும் நீர்வ ரத்து வருகிறது என்றார். மேலும் திருப்பூர் பகுதியில் பாயும் நொய்யல் ஆறு, சிறுவாணி கிழக்கு மலைச்சரிவு மற்றும் வெள்ளியங்கிரி மலைச்சரிவு பகுதிகளில் உற்பத்தியா கிறது. இப்பகுதிகளில் வரையாடுகளும் புல்மலைகளும் இல்லாத காரணத்தி னால் நொய்யல் ஆறு மழைக் காலங்க ளில் மட்டுமே நீர்வரத்து காணப்படுகி றது. இதனால் மனித வாழ்விற்கு முக்கிய ஆதாரமான நீரினை ஆண்டு முழுவதும் தரும் இப்புல் மலைகளையும் வரையா டுகளையும் பேணி பாதுகாக்க வேண் டும் என்றார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி வரையாடு திட்ட வனச்சரக அலுவலர் செந்தூர சுந்தரேசன், நீலகிரி வரையாடு திட்ட முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் சுப்பையன் மற்றும் உடுமலை, அம ராவதி வனச்சரக அலுவலர்கள், வனப்ப ணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.