districts

img

சிபிஎம் கட்டடம் கட்டுவதற்கு ரூ.25 ஆயிரம் நன்கொடை

திருப்பூர், ஜூலை 27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றி யத்துக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் அருகே தோட்டத்துப் பாளையத்தில் புதிய அலுவலகக் கட்டிடம் கட்டப்படுகிறது.  இந்த கட்டிடம் கட்டுவதற்கு கட்சியின் மூத்த தோழர் சி. நாச்சிமுத்து, அவரது மகன்கள் என்.பத்மநாபன், என்.சந்திர சேகர் ஆகியோர் ரூ.25 ஆயிரம் காசோலையை கட்சியின்  மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் வியாழக்கிழமை வழங்கினர். அப்போது கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளி யப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, தோட்டத் துப்பாளையம் கிளைச் செயலாளர் ஈ.மங்கலட்சுமி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.