districts

தூய்மை பணியாளர்களின் வயிற்றில் அடிக்காதீர்கள் கவுன்சிலர்கள் ஆதங்கம் - ஆணையர் அலட்சியம்

ஈரோடு, ஜூலை 15- தூய்மை பணியாளர்களின் வயிற்றில் அடிக்காதீர்கள் என  ஈரோடு மாநகராட்சியில் கவுன்சி லர்கள் ஆதங்கத்தை வெளி படுத்திய நிலையில், நாம் ஒன்றும்  செய்ய முடியாது  என ஆணை யாளர் அலட்சியமாக பதிலளித் தார். ஈரோடு மாநகராட்சியின் மாமன்ற அவசர கூட்டம் வௌ்ளி யன்று நடைபெற்றது. மேயர் சு.நாக ரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், ஆணை யர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசாணை எண். 116ன்படி திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை ஒரு ஆண்டிற்கு ரூ.4360.80 வீதம் மூன்று ஆண்டு களுக்கு ஒப்பந்ததாரர் மூலம்  செயல்படுத்தப்படும். ஒப்பந்தப் புள்ளி அழைப்பில் ஈரோடு மாநக ராட்சி அலுவலகத்தில் குறிப்பிட்ட  நிபந்தனைகளை நிறைவு செய்யும்  ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுக்க மாமன்றத்தின் அனுமதி வேண் டப்பட்டது. மேலும், அரசாணை 158ன்படி ஒப்பந்த பணிக்குத் தேவையான தொழில்நுட்ப அனு மதியை உரிய அதிகாரியிடம் பெற நடவடிக்கை மேற்கொள்ளவும் மாமன்றத்தின் அனுமதி பெற நடவ டிக்கை எடுக்கப்படுகிறது போன்ற நிபந்தனைகளுடன் மாமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. ஒரு மெட்ரிக் டன் கழிவுகளை  கையாள ரூ.3903 என்ற விலை  விகிதத்தில் ஒப்பந்த அடிப்படை யில், திடக்கழிவு மேலாண்மை பணி களை செயல்படுத்த அம்பாய்  அசோசியேட்ஸ் சேலம் என்ற நிறு வனத்தை அனுமதிக்க மாமன் றத்தின் அனுமதி கோரப்பட்டது. மாமன்ற உறுப்பினர்கள் அனுமதிய ளித்தனர். மேற்கண்ட தீர்மானங் களுடன் மற்றொரு தீர்மானமும் நிறைவேறியது. இந்நிலையில், தூய்மை பணி யாளர்கள் தினக்கூலியாக ரூ.707  பெற்றுவரும் நிலையில் தனியார்  நிறுவனத்தினர் வசம் ஒப்படைக் கப்பட்ட பிறகு எவ்வளவு கூலி அளிக்கப்படும் என்ற கேள்விக்கு ரூ.532 என ஆணையாளர் தெரிவித் தார்.

இது ஏற்கனவே பெற்றுவந்த  கூலியை குறைக்கும் நடவடிக்கை யாகும். இதனால், குடும்ப செலவி னங்களை எப்படி சமாளிப்பது என்று கேள்வி எழுப்பப்பட்டது.  இந்நிலையில், ஏற்கனவே வழங்கப்படும் ஊதியம் குறை வின்றி வழங்கப்பட வேண்டும். மாநகராட்சியை நம்பி இத்தனை ஆண்டுகள் வேலை செய்துவரும் தொழிலாளிகளுக்கு வேலை இழப்பு ஏற்படக்கூடாது. பாதாள  சாக்கடை திட்டத்தை தனியாருக்கு  விட்டதில் வேலை சரியாக நடக்க வில்லை. திடக்கழிவு மேலாண்மை பணிகளையும் விட்டால் கடும் சிர மங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்றனர். அதேசமயம்  தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் செயல்படுத்த வழிகாட்டுங்கள் என்ற வேண்டுகோள் விடப் பட்டது. அனைத்து மாமன்ற உறுப் பினர்களும் ஆதரவு அளித்தனர். அதற்கு பதிலளித்த ஆணை யாளர், இது நாம் மட்டும் முடிவு செய்யும் விசயம் இல்லை. நாம்  ஒன்றும் செய்ய முடியாது, என் றார். நம் வீட்டில் சாக்கடை அடைத் துக் கொண்டால் அதனை சரி செய் யும் போது மிகக் கொடுமையான நாற்றம் வரும். நம் வீட்டு நாற் றத்தை நம்மால் தாங்க முடியாது. ஆனால், ஊரை சுத்தம் செய்யும் தொழிலாளியின் வயிற்றில் அடிக் கலாமா? என்று 4ஆம் மண்டல தலைவர் தண்டபாணி கேட்டார். அதற்கு பதிலளித்த ஆணையர், உங்களின் கருத்துகளை தொழி லாளர்களின் கோரிக்கை மூலமாக  அரசின் கவனத்திற்கு அனுப்பி யுள்ளோம். நம் மாநகராட்சி மட்டும்  முடிவு செய்யும்  விசயமில்லை இது  என்றார்.