districts

img

மருத்துவர் தின கொண்டாட்டம்

நாமக்கல், ஜூலை 2- திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில்  மருத்துவர் தின விழா ஞாயி றன்று கொண்டாடப்பட்டது.   பீகார் மாநிலம், பாட்னா அருகே  உள்ள பரங்கிப்போரில் 1882ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியன்று பிறந்த  பிதான் சந்திர ராய் (பி.சி. ராய்). இவர்  தன்  வாழ்நாள் முழுவதுமாக மருத்துவப்  பணிக்கே அர்ப்பணித்தவர். இலவச மாக மருத்துவம் செய்தவர். ஏழை களுக்காக பல மருத்துவமனைகளை  திறந்து வைத்தார். ஜடவ்ப்பூர் டி.பி.  மருத்துவமனை, கமலா நேரு நினைவு  மருத்துவமனை, விக்டோரியா  மருத்துவ கல்லூரி, சித்தரஞ்சன் புற்று நோய் மருத்துவமனை ஆகியவை பி. சி.  ராய் முயற்சியால் நிறுவப்பட்டவை. தனது வீட்டையே ஏழைகளுக்கு மருத்து வமனை கட்டுவதற்காக வழங்கி யுள்ளார். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்தவர். மருத்துவத்தில் மட்டுமல்லாமல் சுதந்திர போராட்டத் திலும் பங்கேற்று நாட்டு பணியில் சிறந்து  விளங்கியவர். மேற்கு வங்கத்தில் 12  ஆண்டுகள் முதல்வராக பதவி வகித் துள்ளார். தான் முதல்வராக இருந்த காலத்திலும் மருத்துவப் பணியை தொடர்ந்து  செய்து வந்தார்.  அதனால்  இவருக்கு 1961ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.  இந்நிலையில், 1976ஆம் ஆண்டு முதல் சிறந்த மருத்துவ சேவை செய்ப வர்களுக்கு பி.சி.ராய் விருது வழங்கப் பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும்  ஜூலை 1ஆம் தேதியன்று  இந்திய மருத் துவ சங்கம் சார்பில் தேசிய மருத்துவர்  தினம் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்செங் கோடு அரசு மருத்துவமனையில் ஹைடெக் ரோட்டரி சங்கம் சார்பில்  மருத்துவர் தின விழா கொண்டாடப் பட்டது. இந்த நிகழ்விற்கு, திருச் செங்கோடு ஹைடெக் ரோட்டரி சங்க  தலைவர் கண்ணன் தலைமை ஏற்றார். செயலாளர் சிதம்பரம், பொருளாளர் பிரவீன் குமார், திட்ட இயக்குநர் வெங் கடேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத் துவர் மோகனா பானு உள்ளிட்ட மருத்து வர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு,  நினைவுப் பரிசும், கேடயமும் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள் என திரளா னோர் கலந்து கொண்டனர்.