districts

img

கார்ப்பரேட் களவாணிகளுக்கு காவடி தூக்காதே மோடியின் கொடும்பாவி எரிப்பு - கைது

கோவை, டிச.9–  இந்திய நாட்டின் விவசாயி களை கார்ப்பரேட்டுகளிடம் அடகு வைக்க துடிக்கும் மோடியின் கொடும்பாவியை எரித்து சாலை மறியலில் ஈடுபட்ட இடதுசாரி கட்சி யினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மத்திய பாஜக அரசின் வேளாண் விரோத சட்ட திருத்தத்தை கண் டித்து நாடு முழுவதும் விவசாயிகள் எழுச்சிகரமான போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்க ளுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சி யினரும் நாடு முழுவதும் போராட் டங்களை முன்னெடுத்து வரு கின்றனர்.

இதன்ஒருபகுதியாக புத னன்று கோவை சுல்தான்பேட்டை பல்லடம் சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க் ்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் யு.கே.சிவஞா னம், சூலூர் தாலுகா செயலா ளர் எம்.ஆறுமுகம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சு.பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வி.ஆர்.பழனிச்சாமி, திருமலை சாமி, விதொச செயலாளர் ஆர்.செல்வராஜ் மற்றும் ரவீந்திரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகினர்.

மோடி கொடும்பாவி எரிப்பு

மேலும், சூலூர் தாலுகா பாப் பம்பட்டி பிரிவில் நடைபெற்ற மறி யல் போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சூலூர் தாலுகா செயலாளர் வசந்தகுமார் ஆகி யோர் தலைமை வகித்தனர். இதில், வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், கார்ப்பரேட்டுகளுக்கு காவடி தூக்குவதை மோடி அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்திய நாட்டு விவசாயிகளை பாதுகாப்போம் என்கிற ஆவேச முழக்கத்துடன் மோடியின் கொடும் பாவியை எரித்தனர். இதனால் காவல் துறையினருக்கும், பேராட் டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனைய டுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் தாலுகா உறுப்பினர் ஸ்டா லின்குமார், ஜோதிபாசு மற்றும் சிபிஐ பி.எஸ்.ராமசாமி, பேரின்பம் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மேட்டுப்பாளையத் தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பால மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஆர்.கேசவமணி, பெரு மாள், ராஜலட்சுமி, மேட்டுப்பாளை யம் தாலுகா செயலாளர் சிராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர் வாகிகள் சிவசாமி, பழனிச்சாமி, துரைசாமி உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர் மோடி அரசை கண் டித்து முழக்கங்களை எழுப்பி மேட்டுப்பாளையம் சாலையில் மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதா கினர்.

சேலம்

சேலம் மாவட்டம், சங்ககிரி பேருந்து நிலையம் முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் சேகர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. இதில், தமிழ்நாடு விவ சாய சங்க சேலம் மாவட்டச் செய லாளர் ராமமூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெய லட்சுமி,  தாலுகா குழு உறுப்பினர் கள் சீனிவாசன், பானுமதி, சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கே.வெங்கடாசலம்,  ராஜேந்தி ரன், பழனியப்பன், சுப்பிரமணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொங்கலூர் ஒன்றியச் செயலா ளர் எஸ்.சிவசாமி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் கே.சின்னசாமி ஆகியோர் தலை மையில் மறியல் போராட்டம் நடை பெற்றது. இதில், சிபிஎம் மாவட் டக்குழு உறுப்பினர் ஜி.சம்பத், சிபிஐ உகாயனூர் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் செல்வராஜ் உட் பட ஏராளமானோர் பங்கேற்று கைதாகினர்.

;