districts

img

தி.மு.ராசாமணி 10ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு

திருப்பூர், செப். 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டக்  குழு உறுப்பினர், எழுத்தாளர் தி.மு.ராசாமணியின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் திருப்பூரில் கடைப்பிடிக்கப்பட்டது. செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டத்  தலைமை அலுவலகமான தியாகி பழனிசாமி நிலையம் முன் பாக நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அலுவலகக் கிளைச் செயலாளர் பா.சௌந்தரபாண்டியன் தலைமை வகித் தார். இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ்  தோழர் ராசாமணியின் பணிகளை நினைவு கூர்ந்து பேசினார்.  மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன், வடக்கு ஒன்றியச் செய லாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். மைதிலி, ஆ.சிகாமணி மற்றும் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ராசாமணி படத்திற்கு  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.