districts

img

மனைப்பட்டா கேட்டு விதொச காத்திருப்பு போராட்டம்

தருமபுரி, செப்.15- அரூர் வட்டத்தில் உள்ள கிராமங் களுக்கு அடிப்படை வசதி, மனைப் பட்டா கேட்டு அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தினர்  அரூர் வட்டாட்சியர் அலுவலகம்  முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அரூர் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கீழானூர் கிராமத் தில் உள்ள கன்ணாங்குத்து புறம் போக்கு நிலம் ச.எண். 65/2-ல் 2.800 ஏக்கர், 63/4-ல் 0.14,/5 ஏக்கர், கிராம நத்தம் 34/2-ல் உள்ள 1.64 ஏக்கர் ஆகியவற்றை தலித் மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். கீழானூர் கிராமத்தில் நீர் பிடிப்பு பகுதியான குள்ளன் குட்டை (புல எண். 85-ல் உள்ள 84.0 ஏக்கர்) நிலத்தின் ஆக்கிரமிப்பு அகற்றி குட்டை அமைக்க வேண்டும். கொத்தனாம்பட்டி இருளர் இன  மக்களுக்கு மயான வசதி  ஏற்படுத்திக்  கொடுக்க வேண்டும்.  மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம்,  போளையம்பள்ளி ஊராட்சிக்குட் பட்ட இடையம்பட்டி கிராம (சர்வே  எண். 396, 397, 412) மக்களுக்கு வழங் கப்பட்ட மனைப்பட்டாவுக்கான  நிலத்தினை அளந்து கொடுக்க வேண்டும். மொரப்பூர் ஒன்றியம், எச். தொட்டம்பட்டி ஊராட்சி  உள்ள கோமாளிப்பட்டி கிராம மக்களுக்கு விடுபட்ட மனைப்பட்டா வழங்க வேண்டும். 

மொரப்பூர் ஒன்றியம், கே.ஈச்சம் பாடி கிராமத்தில் (சர்வே எண். 119/3,  120/2) வீடு கட்டி குடியிருந்து வரும்  தலித் மக்களுக்கு மனைப்பட்டா  வழங்க வேண்டும். எல்லப்புடையாம் பட்டி பஞ்சாயத்து, செளாப்பாரை யில் (சர்வே எண். 80) வீடு கட்டி குடி யிருந்து வரும் மக்களுக்கு மனைப் பட்டா வழங்கவேண்டும். பொன் னேரி பஞ்சாயத்து, ஈட்டியம்பட்டியில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்க ளுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும்.  மேலும் அரூர் வட்டம், எச்.தொட் டம்பட்டி ஊராட்சி  பச்சினாம்பட்டி கிராமத்தில் உள்ள மக்களுக்கு  மனைப்பட்டா வழங்க வேண்டும். மத்தியம்பட்டி ஊராட்சி,  கைலாய புரம், பண்ணைமடுவு அண்ணாநகர், வேடியப்பன்கோயில் இருளர் இன  மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். செல்லம்பட்டி பஞ்சா யத்து சங்கிலிவாடி செல்லம்பட்டி, காமராஜ் நகர், மக்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும். சித்தேரி மலைப்பகுதியில் வன நிலத்தில் நீண்டகாலமாக சாகுபடி செய்து வரும் மலைவாழ் மக்களுக்கு நிலப்  பட்டா வழங்க வேண்டும். வேடகட்ட மடுவு பஞ்சாயத்தில் உள்ள தாம்பல்,  நண்டுப்பள்ளம், ஆலாங்குட்டை கிராம மக்களுக்கு மயான வசதி  ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி  அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் இ.கே.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் எம்.முத்து, ஒன்றிய செய லாளர் எம்.தங்கராஜ், ஒன்றிய செய லாளர் கே.குமரேசன், நிர்வாகிகள் சென்னு, வீரப்பன், சொக்கலிங்கம், ராஜ்குமார் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்ட சங்க தலைவர்களிடம் அரூர்  வட்டாட்சியர் கனிமொழி பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைக்களை 3 மாதத்திற்குள் நிறைவேற்றி தருவதாக கடிதம் மூலம் வட்டாட்சியர் உறுதி அளித் தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

;