districts

img

52 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய குறிச்சிக் குளம் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருப்பூர், மே 21 - திருப்பூர் மாவட்டம் ஊத்துக் குளி தாலுகா குன்னத்தூர் அருகில்  உள்ள குறிச்சி குளம் அதிக மழை பொழிவு காரணமாக 52 ஆண்டுகளுக்குப் பிறகு திங்க ளன்று நிரம்பி வழிந்தது. திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் செவ்வாயன்று இக்குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார்.  ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றி யத்துக்கு உள்பட்ட குறிச்சி ஊராட் சியில் குறிச்சிக் குளம் அமைந்துள் ளது. அதிக மழைப் பொழிவால் இக்குளம் திங்களன்று நிரம்பி யதை அடுத்து இந்த கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்த னர். குளத்துக்கு மலர் தூவி, வாழைப்பழம் வைத்து சூடம் கொளுத்தி வணங்கி மகிழ்ந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி மாவட்டத்தில் 118.70 மில்லி மீட்டர்  மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக அவிநாசி வட்டத் தில் 24 மில்லி மீட்டர் மழைப் பொழிவு, ஊத்துக்குளி வட்டத்தில் 13 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இந்த தொடர் கனமழை காரணமாக 36 ஏக்கர் பரப்பளவு கொண்ட குறிச்சிக் குளம்  நிரம்பியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள்  கூறுகையில், கடந்த 1972ஆம் ஆண்டு குறிச்சிக் குளம் நிரம்பியது.  இதையடுத்து கடந்த 52 ஆண்டுகள் கடந்து இப்பொழுதுதான் இக்கு ளம் நிரம்பி வழிகிறது எனத் தெரி வித்தனர். மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் செவ்வாயன்று நேரில் அந்த குளத்தைப் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அவரு டன் ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் சரவணன், மகேஷ்வ ரன், உதவி பொறியாளர் சரவணக் குமார் உள்ளிட்டோர் உடனிருந்த னர். விவசாயிகள் பலர் பங்கேற் றனர்.

;