உடுமலை, அக். 9- உடுமலை வனச்சரகத்திற் குட்ட்பட்ட ஏழுமலையான் கோவில் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் தூய்மை பணி நடைபெற்றது. உடுமலை வனச்சரகத்திற் குட்பட்ட உடுமலை - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அடர்ந்த வனப்பகுதி யான ஆனைமலை புலிகள் காப் பகத்தில் ஏழுமலையான் பெரு மாள் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், புரட் டாசி சனிக்கிழமைகளில், உடு மலை சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 5 கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதிக்குள் கோவிலுக்கு பொதுமக்கள் வருகை தருகின் றனர். ஒவ்வொரு வாரமும் கல் லூரி மாணவர்கள் நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பாக சனி யன்று முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக் குள் எடுத்துச் செல்லாமல் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் தண்ணீர் தேவைக் காக கொண்டு வருகின்ற பிளாஸ் டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் ஆகியவற்றை பொது மக்கள் வனப்பகுதிகளிலே வீசி செல்கின்றனர். இதனை வனப் பகுதியில் உள்ள யானைகள், சிறுத்தைகள் மற்றும் குரங்கு கள் உட்பட வனவிலங்குகள் உணவெனக் கருதி சாப்பிடுவ தால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், வன விலங்கு களையும், வனத்தையும் பாது காக்க வேண்டும் என்பதை நோக் கமாகக் கொண்டு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை உடுமலை ராயல்ஸ் அரிமா சங் கம் உட்பட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மற்றும் சுற்றுச் சூழல் தன்னார்வலர்கள் ஒருங் கிணைந்து தூய்மை பணியினை செய்து வருகின்றனர். மூன்றாவது வாரமான ஞாயி றன்று 3000க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை 30 சாக் குகளில், பொது மக்கள் நடந்து செல்லும் பாதைகள், வனப் பகுதி, கோவில் வளாகம் ஆகிய இடங்களில் இருந்து சேகரித்து அவற்றை எடுத்து வந்து செக் போஸ்ட் பகுதியில் வனத்துறை யினரின் குப்பை சேகரிக்கும் வாகனம் மூலம் அப்புறப்படுத் தப்பட்டது.