மேட்டுபாளையம், அக். 8 – வன பகுதி சாலையோரம் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி மது பாட்டில் கழிவுகளால் பாதிக்கப் படும் யானை உள்ளிட்ட காட்டுயிர்கள் மற்றும் இயற்கை சூழலை பாதுகாக்க நெகிழி மற்றும் கண்ணாடி கழிவு களை அப்புறப்படுத்தும் பணியில் வன உயிரின ஆர்வலர்கள் ஈடுபட்டனர். வனம் சார்ந்த சாலைகளில் பயணிக்கும் சுற்றுலா பயணி கள் வீசியெறியும் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில் கழிவுகளால் யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டம், வழி யாக நீலகிரி மாவட்டத்தினுள் செல்லும் சுற்றுலா வாக னங்கள் அனைத்தும் மேட்டுப்பாளையத்தை கடந்தே சென்றாக வேண்டும். எனவே, இப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் கோத்த கிரி வழியே உதகையினை சென்றடையும் நெடுஞ் சாலைகள் இரண்டுமே அடர்ந்த வனத்தை ஊடுறுவியே செல்கின்றன. இருபுறமும் இயற்கை காடுகள் கொண்ட இச் சாலைகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பலரும் தாங்கள் எடுத்து வரும் நெகிழி பைகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களின் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் கண்ணாடி மது பாட்டில்களை சாலையோரம் வீசி செல்கின்றனர். இதனால் இயற்கை சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதோடு இப்பகுதி காட்டில் உள்ள யானைகள், மான்கள், குரங்குகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் உயிரிழக்கும் அவல நிலையும் உருவாகியுள்ளது.
குறிப்பாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியே உதகை சென்றடையும் சாலை கல்லார் யானைகள் வழித்தடத்தில் அமைத்துள்ளதால், இவ்வழியே பயணிக்கும் யானைகளின் கால்களில் கண்ணாடி பாட்டில் சிதறல்கள் குத்தி இப்பேருயிரை முடக்கி விடுகின்றன. இதனை கருத்தில் கொண்டு வன உயிரின வார விழாவை கொண்டாடும் வி தமாக கோவை கோட்ட வனத்துறையினர் மற்றும் உலக இயற்கைக்கான நிதியம் (WWF) இணைந்து சாலையோர வனப்பகுதி மற்றும் யானைகளின் வழித்தடத்தில் உள்ள கண்ணாடி பாட்டில்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடு பட்டனர். சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வித மாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் மூட்டை மூட்டையாக கண்ணாடி மது பாட்டில்கள் மற்றும் நெகிழி பைகள் அகற்றப் பட்டன. இது போன்ற வனச்சூழலையும் வன உயிரினங் களையும் பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது வனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.