districts

img

அரசு பேருந்துகளில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதா?

கோவை, செப்.5– மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் அரசு  போக்கு வரத்து கழகத்தின் நடவடிக்கைக்கு கோவை மாவட்ட மாற்றுதிறனா ளிகள் சங்கம் கண்டம் தெரிவித்துள் ளது.  தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைக்கான நலசங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு ஞாயி றன்று காந்திபுரம் கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் நடைபெற் றது. மாநிலக்குழு உறுப்பினர் கே. மகாலிங்கம் தலைமையில் நடை பெற்ற மாநாட்டு கொடியை ஆண் டாள் ஏற்றிவைத்தார். மாநாட்டை துவக்கிவைத்து சங்கத்தின் சிஐ டியு கோவை மாவட்ட நிர்வாகி கே. மனோகரன் உரையாற்றினார். வேலையறிக்கையை மாவட்ட செயலாளர் எஸ்.புனிதா முன்வைத் தார். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு நிர்வாகி கே.மனோகரன், வழக்கறி ஞர் ஜோதிகுமார் ஆகியோர் உரை யாற்றினர்.  இதில், மாற்றுத்திறனாளிக ளுக்கு உதவித்தொகையை அண்டை மாநிலங்கள் அதிகப்ப டுத்தி தருகிறது. ஆனால் வளர்ச்சி யடைந்த தமிழகத்தில் குறைத்து தரப்படுகிறது. உடனடியாக அதிகப் படுத்தி தர வேண்டும்.  நகரப்பேருந் துகளில் பயணிக்கும் மாற்றுத்திற னாளிகள் அருகாமை மாவட்டம் செல்லுகையில், பயண அட்டை  சலுகை பெற முடியாது என அலைக் கழிக்கப்படுகின்றனர். பலநேரங்க ளில் பாதி வழியிலேயே இறக்கி விடும் சம்பவங்கள் நடைபெறுகி றது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்துடன் பேசி உரிய தீர்வை எட்ட வேண்டும். அரசுத் துறையை போல தனியார் துறையி லும் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த உரிய சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றபட்டன.  மாநாட்டில் மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளராக கே.மகாலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.புனிதா மற்றும் வழக்கறிஞர் ஜோதி குமார் உள்ளிட்ட 8 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் மாநில உதவி செய லாளர் பி.ராஜேஷ்  உரையாற்றி னார். முடிவில் விஜயராகவன் நன்றி கூறினார்.

;