கோவை, ஜூன் 19- சொத்தை விற்றதற்கு முழுமை யாக பணம் வழங்காமல் ஏமாற்றி, தாக்குதல் நடத்துவதாக அதிமுக பிர முகர் மீது புகார் தெரிவித்து மாற்றுத் திறனாளி மகனுடன் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் தர்ணா வில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் திங்களன்று மாற்றுத்திறனாளி மகன், உட்பட இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து அவர் கூறுகையில், தனது தாயார் சொத்தை கடந்த 6 வருடங்க ளுக்கு முன் அதிமுகவை சேர்ந்த புனிதா நாகராஜ் என்பவருக்கு விற்ற தாகவும், விற்பனை செய்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை மட்டும் தனக் கும், எனது சகோதர, சகோதரிக்கும் கொடுத்து விட்டு மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை தராமல் இருப்பதாக வும், தற்போது தனது தாயார் இறந்த நிலையில், மீதமுள்ள பணம் குறித்து கேட்டால் தன்னை இழிவாக பேசு வதாகவும் பணத்தை தராமல் இழுத் தடிப்பதாக தெரிவித்தார். மேலும், தன்னை அடியாட்கள் வைத்து தாக்கி அதிமுகவில் இருக் கும் அதிகாரத்தை பயன்படுத்தி தங் கள் இருக்கும் வீட்டை காலி செய்ய வைப்பதாகவும் எங்கு சென்றாலும் தங்களை பற்றி குற்றம் கூறி அவப் பெயரை உண்டாக்குவதாகவும் தெரி வித்தார். மேலும் தன்னை தாக்கி விட்டு காவல் நிலையத்தில் தங்கள் மீது புகார் தெரிவித்து தன்னை கைது செய்ய முயன்றதாக தெரிவித்தார். எனவே, தானும் குடும்பத்தின ரும் என்ன செய்வதென்றே தெரியா மல் நிற்கதியாக நிற்பதாகவும், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டு தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை அதி முகவை சேர்ந்த புனிதா நாகராஜிடம் இருந்து பெற்று தர வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதன்பின் தர் ணாவில் ஈடுபட்ட அவர்களிடம் போலீ சார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி. மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றனர்.