districts

img

சீர்மிகு நகரம் திட்டத்தில் சீரழிக்கப்பட்ட சாலைகள்

திருப்பூர், டிச. 10 - திருப்பூரில் சீர்மிகு நகரம் திட்டப்பணி செய்வதாக சீரழிக்கப்பட்ட சாலைகளை செப்பனிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பூர் ஓடக்காடு கே.என்.பி.புரம் துவக்கப் பள்ளி அருகில் வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்திற்கு ஓடக்காடு கிளைச் செயலாளர் ஆர்.சிவசண்முகம் தலைமை வகித்தார். இதில் நகரில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தவும், சீர் குலைக்கப்பட்ட சாலைகளை செப்பனிடவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.மைதிலி. மாநகர குழு உறுப்பினர் ராஜேந்திரன்  ஆகியோர் உரையாற்றினர். மேலும், மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.உன்னிகிருஷ்ணன் மாநகர குழு  உறுப்பினர்கள் ஆர்.நந்தகோபால், பி.மனோ கரன், கே.நாகராஜ், துரை.சம்பத், ராமா னந்த், பி.பாலகுமாரன், பா.ராஜேஷ், முன் னாள் மாமன்ற உறுப்பினர்கள் சபுரோ ஆர்.ரங்கசாமி, குணசேகரன், காலேஜ் ரோடு கிளைச் செயலாளர் சின்னசாமி  உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

;