திருப்பூர், ஜூலை 17 - மழைக்காலம் வருவதற்கு முன்பாக திருப்பூர் மாநகரில் 24, 25, 26 மற்றும் 27 ஆகிய நான்கு வார்டுகளில் உள்ள பழு தடைந்த வீதிகளில் சாலைகளை செப்ப னிட வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருப்பூர் குமார் நகர் முதல் சாமுண் டிபுரம் வழியாக சிறுபூலுவபட்டி வரை செல்லும் சாலையில் போக்குவரத்து மிகுந்து உள்ள இடங்களில் வேகத் தடை அமைப்பதுடன், குமார் நகர் ஆரம் பப் பள்ளி அருகிலும் வேகத்தடை அமைக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களையும், உடைபட்ட குடிநீர் மற்றும் தண்ணீர் குழாய்களையும் மழைக்காலத்திற்கு முன்பாக சீர மைக்க வேண்டும், 24, 25, 26 மற்றும் 27 ஆகிய நான்கு வார்டுகளிலும் உள்ள பழுதடைந்த வீதிகளில் மழைக்காலத் திற்கு முன்பாக புதிய தார் சாலைகள் அமைக்க வேண்டும். சாமுண்டிபுரம் எஸ்ஏபி தியேட்டர் சாலையை இணைக் கும் வாசுகி நகர் பகுதியில் சாலை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி வ உ சி நகரில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வ.உ.சி.நகர் கிளை உறுப்பினர் முரு கேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிளைச் செயலாளர் கீர்த் திகை வாசன், மாநகர குழு உறுப்பினர் துரை.சம்பத், மாநகர குழுச் செயலா ளர் பி.ஆர்.கணேசன் ஆகியோர் உரை யாற்றினர். கட்சி அணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். நிறைவாக கிளை உறுப்பினர் சுரேந்திர குமார் நன்றி கூறினார்.