districts

img

போனஸ் கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 17 – திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம்  பல்லகவுண்டன்பாளையதில் இயங்கி வரும் சக்தி ஆட்டோ காம்போனெண்ட்  நிறுவனத் தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி கவன  ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகை யில், நிறுவனத்தின் உற்பத்தி அதிகரித்தி ருந்த போதிலும், 8.33 சதவிகித போனஸ் மட் டுமே தருவதாக நிர்வாகத்தரப்பில் தெரிவிக் கப்பட்டது. நிர்வாகம் முன்மொழியும் போனஸ் ஏற்புடையதல்ல. ஆகவே முதற்கட்டமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்ற னர்.  இப்போராட்டத்திற்கு சிஐடியு இன்ஜினிய ரிங் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர்.பழ னிச்சாமி தலைமை வகித்தார். சங்கச் செயலா ளர் ஜெ.கந்தசாமி, துணைத்தலைவர் கே. கண்ணையன், பொருளாளர் வி.காமராஜ்,  சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;